About Me

2020/11/05

வறட்டு கௌரவம்



சோபனங்களைச் சுமந்து பயணிக்கின்ற வாழ்வு/

சோர்ந்து வீழ்கின்றதே வறட்டுக் கௌரவத்தில்/

நிசங்களின் துளைகளை நிரப்புகின்றன மாயைகள்/

நிம்மதி கலைக்கையில் நிதானமிழக்கின்றது மனது/


தனக்கான வாழ்வினை  பிறர் தரிப்பிடங்களாக்கி/

தகுதியில்லாக் கௌரவத்தினுள் தனையும் அடக்கி/

தவிப்புக்களைச் சுமந்து தத்தளிப்போரின் உயிர்ப்பு/

தள்ளாடுதே தினமும் அவலச் சுமைக்குள்/


அடுத்தவர்க்கே அஞ்சி தன்னையே ஒளிப்போர்/

அவனிக்குள் அலைகின்ற சுயமற்ற மாந்தரே/ 


ஜன்ஸி கபூர் - 05.11.2020


 


பூவே உனக்காக




உணர்வுகளின் மொழிவில்  உறவானாய் என்னுள்/

உதடுகளும் நிதம்  உனையே உச்சரிக்க/

உதிர்கின்ற பொழுதெல்லாம்  உயிர்க்கின்றாயே நினைவுகளாக/

உலகத்தின் ஈர்ப்புக்குள்  உடையாதே அன்பும்/

உள்ளத்தில் தினமும்  உனையேந்தி வாழ்வதற்காகவே/

உலகத்தில் பிறந்தேனே  பூவே உனக்காக/


ஜன்ஸி கபூர்  - 12.11.2020

 




 

2020/11/04

காலச்சுவடுகள்


உதிர்கின்ற பொழுதுகள் உரமாக்குகின்ற செயல்கள்/

உறைகின்றன நெஞ்சினில்  உன்னதமான காலச்சுவடுகளாக/

உணர்வுக்குள் வீசுகின்ற நினைவுகளின் வாசங்கள்/

பத்திரப்படுத்தப்படுகின்றன மனதினில் காலத்தின் சேமிப்பாக/


சுதந்திரமாக விழிக்குள் சுற்றிய கனாக்கள்/

வாழ்க்கைத் தடங்களின் வளமான பண்பாடுகள்/

வறுமையையும் கிழித்து  வாழ்கின்ற முனைப்பு/

வரலாற்றுடன் இணைந்தே  துளிர்க்கின்றன தலைமுறைகளுக்குள்/


போரின் மூர்க்கம்  போதித்த தாக்கம்/

போக்கிடமின்றித் தவித்த பெருந்துன்பங்களின் வீரியங்கள்/

துளைத்த கணங்கள் துடிக்கின்றன இன்னும்/

துடைத்தெறியப்படாத மறதிக்குள் துயரும் நீள்கின்றது/


அணிவகுத்துச் செல்கின்ற அகிலத்தின் அவலங்கள்/

அவ்வவ்போது அணிகின்ற சமாதானங்களின் மலர்ச்சி/

ஒவ்வொரு ஆத்மாக்களின் உயிர்ப்புக்களின் இருப்புக்களாகி/

தரித்து நிற்கின்றன காலமெனும் காலச்சுவட்டினுள்/


ஜன்ஸி கபூர் - 08.11.2020


 
 



கடைப் பார்வை

1. கடை – விடை -- நடை – மடை 

********************************* 
வீழ்ந்தேன் உன்றன் கடைப் பார்வையினில்/
விடை சொல்லாயோ துளிர்க்கின்ற காதலுக்கே/
நடை சிந்தும் நளினம் கண்டே/
மடை வெள்ளமாக இன்பம் ஊற்றுதடி/

ஜன்ஸி கபூர் - 04.11.2020