உதிர்கின்ற பொழுதுகள் உரமாக்குகின்ற செயல்கள்/
உறைகின்றன நெஞ்சினில் உன்னதமான காலச்சுவடுகளாக/
உணர்வுக்குள் வீசுகின்ற நினைவுகளின் வாசங்கள்/
பத்திரப்படுத்தப்படுகின்றன மனதினில் காலத்தின் சேமிப்பாக/
சுதந்திரமாக விழிக்குள் சுற்றிய கனாக்கள்/
வாழ்க்கைத் தடங்களின் வளமான பண்பாடுகள்/
வறுமையையும் கிழித்து வாழ்கின்ற முனைப்பு/
வரலாற்றுடன் இணைந்தே துளிர்க்கின்றன தலைமுறைகளுக்குள்/
போரின் மூர்க்கம் போதித்த தாக்கம்/
போக்கிடமின்றித் தவித்த பெருந்துன்பங்களின் வீரியங்கள்/
துளைத்த கணங்கள் துடிக்கின்றன இன்னும்/
துடைத்தெறியப்படாத மறதிக்குள் துயரும் நீள்கின்றது/
அணிவகுத்துச் செல்கின்ற அகிலத்தின் அவலங்கள்/
அவ்வவ்போது அணிகின்ற சமாதானங்களின் மலர்ச்சி/
ஒவ்வொரு ஆத்மாக்களின் உயிர்ப்புக்களின் இருப்புக்களாகி/
தரித்து நிற்கின்றன காலமெனும் காலச்சுவட்டினுள்/
ஜன்ஸி கபூர் - 08.11.2020
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!