About Me

2020/12/09

Sahrish cert

 உலா வரும் நிலா

+++++++++++++++++

இருளும் கலைகின்றதே ஒளியினிலே/

விருந்தும் ஆகின்றாய் விழிகளுக்கே/

ஒளிரும் உந்தன் அழகினிலே/

மிளிருதே வானும் மகிழ்வினிலே/


சஹ்ரிஸ் சதாத் - 9.12.2020

---------------------------------------------------------------------

காலத்தை வென்ற கவியரசர் கண்ணதாசன்




 
காவியத் தாய் கண்டெடுத்த கண்ணதாசன்/
கவியுலகம் சூடிக் கொண்ட மணிமகுடமே/
கரையுமே கற்களும் வரிச் சுவையினில்/
கவிப் புலமைக்குள் வியக்குமே தமிழுமே/

எட்டையும் தாண்டாப் பள்ளிப் படிப்பால்/
தீட்டிய திரையிசைப் பாடல்கள் பொக்கிசங்களே/
ஏட்டினைத் தழுவிய பொன் எழுத்துக்கள்/
வெட்டவெளிக்குள் ஒலிக்கின்றதே சங்கீத மொழியாகி/

சிறுகூடல்பட்டி முத்தையா சிந்தைக்குள் கவியரசானார்/
செதுக்கிய சிற்றிலக்கியங்களும் காப்பியங்களும் நூல்களும்/
இலக்கியத் தடத்தின் அற்புதச் சுவடுகளாம்/
உலகமும் ரசிக்கின்றதே உன்னத படைப்புக்களை/ 

வாழ்வியல் உணர்வினை வடித்த இலக்கியங்கள்/
வாழ்கின்றன நம்முடன் அனுபவங்களாகப் பிறந்தே/
நரைத்திடாத் தமிழ்ச் செழுமை உயிர்ப்பினில்/
வரைகின்றதே காலமும் அழியாக் கவிஞனென்று/
 
ஜன்ஸி கபூர் - 9.12.2020
 



 



2020/12/08

எங்கே நிம்மதி

 




நிலையற்ற வாழ்விலும் ஊசலாடுகின்றதே ஆசைகள் 

கலைக்கின்றதே அமைதியை மனமோ கலக்கத்தில் 

தினமும் படருகின்ற எதிர்பார்ப்பின் கவனமும் 

திகைக்குதே வழி தெரியாப் பயணத்தில் 


தேடலுள் தொலைகின்ற நாகரிகத் தாக்கம் 

தேடுகின்றதே ஆபத்துக்களை வாட்டமும் சூழ்ந்திடவே 

நாடுகின்ற தீமைகள் நகைக்கின்றதே அழிவிற்காக 

நகையும் மறந்த கன்னங்களும் வலிக்கின்றதே 


அன்பைத் துறக்கின்ற அவல வாழ்வும் 

குவிக்கின்ற பிணக்கால் பிரிகின்றதே இணக்கமும் 

வரவும் மறந்த செலவின் தாக்கம் 

வடிக்கின்ற கண்ணீரும் வனப்பை அழிக்கின்றதே 

  

நோயும் வறுமையும் துரத்துகின்ற வாழ்வில் 

நோவும் வலியும் பிணைந்தே வருகின்றதே 

முட்பாதைகளின் முகவரியில் முடிசூடுகின்ற காயங்கள் 

தலைகாட்டுகின்ற வாழ்வினில் நிம்மதியும் தொலைகின்றதே 


ஜன்ஸி கபூர் - 8.12.2020

 



 




2020/12/06

சொந்தம்

 




உருவம் கைகோர்த்துக் கொண்டாலும்/

உணர்வில் படியாத உறவாகவே கடக்கின்றது/

நம்மைச் சூழ வாழ்கின்ற சொந்தம்/


ஜன்ஸி கபூர் - 6.12.2020