உஷ்ணம்...!🌞🌞🌞
கஷ்டம் கொடுக்கவில்லை போலும்!!
கொந்தளிக்கும் கடற்கரையோரத்திலும்
முளைத்திருக்கின்றன குடைகள்☂☂☂
காதலுடன்....🧡🧡🧡
-ஜன்ஸி கபூர் -11.04.2021 -
உஷ்ணம்...!🌞🌞🌞
கஷ்டம் கொடுக்கவில்லை போலும்!!
கொந்தளிக்கும் கடற்கரையோரத்திலும்
முளைத்திருக்கின்றன குடைகள்☂☂☂
காதலுடன்....🧡🧡🧡
-ஜன்ஸி கபூர் -11.04.2021 -
பிறப்பில் உற்பத்தியாகும் மனித உயிர்கள் இறப்பு எனும் புள்ளியைத் தொடுவது இயல்பான வாழ்ழ்க்கையின் நியதிதான் என்றாலும்கூட அந்த மரணங்கள் விட்டுச் செல்கின்ற சோகங்கள் ஆற்றமுடியாமல் கனக்கின்றன. சோகங்களுக்கு அரசன், ஆண்டி பேதங்கள் தெரிவதில்லை. வலியின் வலிமை இழப்புக்களின்போதே தொட்டுப் பார்க்கின்றன. அமைதி எட்டிப் பார்க்கின்ற அந்த மௌன நிலையிலேயே அவர்கள் பற்றிய கடந்த கால நினைவுகள் பலராலும் மீட்டப்படுகின்றன.
உலக அளவிலும் அன்பைப் பெற்ற, பிரிட்டிஷ் வரலாற்றில் நீண்ட காலம் வாழ்ந்த அரச குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்த எடின்பரோ கோமகன் அவர்களின் மறைவுச் செய்தி நம் காதுகளை எட்டியுள்ளது.
மாட்சிமை பொருந்திய இளவரசர் ஃபிலிப், எடின்பரோ கோமகன் அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலி.
எப்போதும் மகிழ்ச்சியை தன்னுள் நிரப்பிக் கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கும் மனது❤❤❤
சின்னச் சின்ன விடயங்களுக்காக அச்சந்தோசங்களைப் பறிகொடுத்துவிட்டுத் தவிக்கின்றது👎👎👎
ஜன்ஸி கபூர் - 9.4.2021
💧💧💧💧 வீழ்கின்ற மழைத்துளிகள் 💧💧💧💧
🌺🌻🌼🌷 தவழ்கின்றன மலர்களில் பனித்துளிகளாக 🌺🌻🌼🌷
கிடைக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களும் நமது தேடலுக்கான விடைத் தளங்களாகவும் இருக்கலாம்.
ஜன்ஸி கபூர் - 08.04.2021