பொறாமை எண்ணம்//
பெருமையைக் கொல்லும்//
சிறுமையும் தந்தே//
நம்மையே வருத்தும்//
ஜன்ஸி கபூர் - 24.04.2021
கைகளை கழுவுங்கள்
முகக் கவசம் அணியுங்கள்
சமூக இடைவெளி பேணுங்கள்
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுங்கள்
என எவ்வளவுதான் அறிவுரைகள் தரப்பட்டாலும், சிலர் இவற்றைப் பொருட்படுத்துவதேயில்லை. இவர்களிடத்தில் கொரோனாவே வந்து பயம் காட்டினாலும்கூட, இவர்கள் தமது பிடிமானத்திலிருந்து அசைவதாக இல்லை. மனதால் மானசீகமாக உணராமல் சட்டத்திற்குப் பயந்து பின்பற்றுகின்ற எதுவும் ஆரோக்கியம் தரப்போவதில்லை.
New health guidelines to be followed till 31st May issued (English)
April 23, 2021 at 6:26 PM
எனும் தொகுப்பிலிருந்து சுருக்கமான தகவல்கள் எனது பார்வையில் இதோ-
அனைத்திலும் சுகாதார நடைமுறைகள் கடைப்பிடிக்க வேண்டும்.
ஆரோக்கிய வாழ்வினை நாமும் பெற்று நம்மைச் சார்ந்தோருக்கும் வழங்குவோமாக
ஜன்ஸி கபூர்
இதமான பாடல்கள்
அமைதியால் அழகு பெறுகின்ற ஒவ்வொரு இரவினையும் உரசிச் செல்கின்ற வானொலி இசையை செவிகள் உள்வாங்கும்நேரம் இரசிப்பின் உச்சத்துக்குள் மனம் நுழைந்து விடுகின்றது.
நிசப்தத்திற்குள் மலர்கின்ற அந்தத் தென்றல் இசையோசையில் விழிகள் உறக்கத்திற்குள் தாவுவதும் நமக்குத் தெரிவதில்லைதான்.
அழகான மென் இசைகள் நம்மைத் தாலாட்டும் நேரம் இரவும் மடியாகி நம்மைத் தாங்கி விடுகின்றது.
ஜன்ஸி கபூர் - 23.04.2021
அழகான பட்டாம்பூச்சியொன்று சில நாட்களாக அந்தப் பூக்களைச் சுற்றி சுற்றி வருகின்றது. காற்றோடு உரசுகின்ற அதன் சிறகுகள் அமுதத்தின் போதை நினைப்பில் ஆசையுடன் உராய்கின்றன.
நாட்கள் செல்லச் செல்ல ஈர்க்கப்பட்ட புற அழகின் கவர்ச்சி படிப்படியாகக் குறைய,
ஒரு நாள் அந்த மலரின் பார்வையிலிருந்து நீங்கி விட்டது அந்தப் பூச்சியும்.....
அந்தப் பூச்சிதான் மனதோ.....
வாழ்க்கையில் எதுவும், எந்த உணர்ச்சியும் யாருக்கும் நிரந்தரமில்லை. இயல்பான வாழ்வில் மனம் போராடும்போது, புற மாயைகளிலிருந்து நீங்கி விடுகின்றது. ஆசையும், அதிசயமும் கலவையாகி ஜொலித்த ஒவ்வொன்றும் அந்நியமாகி விடுகின்றன.
இதைத்தான் இரசித்தோமா
ஆச்சரியம் நம்மை விழுங்கி விடுகின்றது.
மனதில் ஊற்றெடுத்த ஆசைகள் மங்கிப் போக, மறுதலையாக ஏமாற்றமும் அலுப்பும் ஒன்றன்பின் ஒன்றாக நம்மைத் துரத்த ஆரம்பிக்கின்றன.
ஒரு குறித்த காலத்தின் பின்னர் நாம் ஆசைப்பட்ட விடயங்களை அசை போட்டுப் பார்ப்போமாயின், அவை சாதாரண விடயங்கள்போல் நம்மை விட்டுக் கடந்து போயிருக்கும். நம்மைப் பற்றிய சுய விசாரணையின்போது அட இதற்குத்தான் இப்படி முக்கியத்துவம் கொடுத்தோமா என நம்மையே நாம் திருப்பிக் கேட்போம். ஏனெனில் அன்பைத் தவிர அனைத்துமே காலவோட்டத்தில் காணாமல் போய்விடுகின்றன.