அழகான பட்டாம்பூச்சியொன்று சில நாட்களாக அந்தப் பூக்களைச் சுற்றி சுற்றி வருகின்றது. காற்றோடு உரசுகின்ற அதன் சிறகுகள் அமுதத்தின் போதை நினைப்பில் ஆசையுடன் உராய்கின்றன.
நாட்கள் செல்லச் செல்ல ஈர்க்கப்பட்ட புற அழகின் கவர்ச்சி படிப்படியாகக் குறைய,
ஒரு நாள் அந்த மலரின் பார்வையிலிருந்து நீங்கி விட்டது அந்தப் பூச்சியும்.....
அந்தப் பூச்சிதான் மனதோ.....
வாழ்க்கையில் எதுவும், எந்த உணர்ச்சியும் யாருக்கும் நிரந்தரமில்லை. இயல்பான வாழ்வில் மனம் போராடும்போது, புற மாயைகளிலிருந்து நீங்கி விடுகின்றது. ஆசையும், அதிசயமும் கலவையாகி ஜொலித்த ஒவ்வொன்றும் அந்நியமாகி விடுகின்றன.
இதைத்தான் இரசித்தோமா
ஆச்சரியம் நம்மை விழுங்கி விடுகின்றது.
மனதில் ஊற்றெடுத்த ஆசைகள் மங்கிப் போக, மறுதலையாக ஏமாற்றமும் அலுப்பும் ஒன்றன்பின் ஒன்றாக நம்மைத் துரத்த ஆரம்பிக்கின்றன.
ஒரு குறித்த காலத்தின் பின்னர் நாம் ஆசைப்பட்ட விடயங்களை அசை போட்டுப் பார்ப்போமாயின், அவை சாதாரண விடயங்கள்போல் நம்மை விட்டுக் கடந்து போயிருக்கும். நம்மைப் பற்றிய சுய விசாரணையின்போது அட இதற்குத்தான் இப்படி முக்கியத்துவம் கொடுத்தோமா என நம்மையே நாம் திருப்பிக் கேட்போம். ஏனெனில் அன்பைத் தவிர அனைத்துமே காலவோட்டத்தில் காணாமல் போய்விடுகின்றன.
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!