About Me

2021/05/07

முருங்கைக்கீரை ஜூஸ்

பகிர்வு

முருங்கைக்கீரையின் சிறப்பு முருங்கைக் கீரையில் பசலைக் கீரையை விட 25 மடங்கு அதிகமாக இரும்புச்சத்தும், ஆரஞ்சு பழத்தை விட 7 மடங்கு அதிகமாக விட்டமின் சி சத்தும், வாழைப்பழத்தை விட 15 மடங்கு அதிகமாக பொட்டாசியமும், முட்டையை விட 4 மடங்கு அதிகமாக புரோட்டீனும், கேரட்டை விட 10 மடங்கு அதிகமாக வைட்டமின் ஏ சத்தும், பாலை விட 17 மடங்கு அதிகமாக கால்சியம் சத்தும் உள்ளது.

கொரோனோவில் இருந்து தப்பிக்க உதவும் நெல்லிக்காய் - முருங்கக்கீரை ஜூஸ் :  

செய்வது எப்படி? 

முருங்கை இலையில் அதிக ஆன்டிஒக்சிசன்டுகள் உள்ளன. நெல்லிக்காயுடன் இதனை சேர்த்து சாப்பிடும்போது உடலில் இரும்பு சத்து உறிஞ்சுவது அதிகப்படுத்தப்படுகிறது. இதன்மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக தெரிவித்துள்ள ஊட்டச்சத்து நிபுணர்கள், வாரத்தில் இரண்டு மூன்று முறை இந்த ஜூஸ் தயார் செய்து குடிக்கலாம் என கூறியுள்ளனர்.

தேவையான பொருட்கள்:

  • 1/2 டீஸ்பூன் - முருங்கக்காய் பவுடர் அல்லது 5 -10 முருங்கை இலைகள் 
  • 2 - நெல்லிக்காய் 
  • அரை டம்ளர் - தண்ணீர் 

செய்முறை :

  • இந்த ஜூஸை செய்வதற்கு மேற்கூறிய அனைத்து மூலப் பொருட்களையும் ஒன்றாக சேர்க்க வேண்டும். 
  • அரை டம்ளர் தண்ணீரையும் அவற்றுடன் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். 
  • பின்னர்  நெல்லிக்காய், முருங்கை இலை, தண்ணீர் ஆகியவற்றை மிக்சியில் போட்டு நன்றாக மைய அரைக்கவும். 
  • தற்போது ஜூஸ் ரெடியாக உள்ளது. 
  • உங்களுக்கு விருப்பம் இருந்தால் அப்படியே குடிக்கலாம். இல்லையென்றால் வடிகட்டி குடிக்கலாம். 
  • தினமும் காலை நேரத்தில் குடிக்க ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். 
  • உணவுடன் சேர்த்து குடிக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

- Jancy Caffoor-

2021/05/05

காலம் பொன் போன்றது

 வாழ்க்கை எனும் நீண்ட பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்ற எமக்கு காலம் எனும் மைல் கல்லே திசைகாட்டியாக நின்று வழிகாட்டிக் கொண்டிருக்கின்றது. நம்மைக் கடந்து செல்கின்ற அந்தப் பெறுமதியான காலத்தின் நகர்வு நமது அனுபவங்களையும் அதிகரித்துச் செல்கின்றது. 

நேரம் என்பது நம்மிடம் காணப்படுகின்ற மிகப் பெரிய சொத்து. அதனை சரியாகப் பயன்படுத்தும் அறிவு திறன் நம்மிடம் இருக்கும்பட்சத்தில் அந்நேரம் நம் வாழ்வின் பொன்னான நேரமாகி விடுகின்றது. முன்னேற்றம் நம் வாசலைத் தொட்டு விடுகின்றது.

ஆனால் காலத்தை வீணாக்கி விட்டால் அல்லது நாளை நாளை எனத் தள்ளிப் போட்டால் நகராத கடிகாரம் போல் நாமும் செயலற்றுப் போய் விடுவோம். அற்புதமான அழகிய பெறுமதியான வாழ்வும் விழலுக்கிறைத்த நீர் போல் வீணாகி விடும்.

'காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருக்காது ''காலம் வீணானால் திரும்பக் கிடைக்காது', 'காலம் பொன் போன்றது', "பருவத்தே பயிர் செய்",  "இளமையிற் கல்வி சிலையில் எழுத்து",  "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா" போன்ற பழமொழிகள்கூட வாழ்வியல் அனுபவங்களின் தொகுப்புக்களே.

கற்கின்ற காலத்தில் கண்ணாகப் போற்றப்படுகின்ற நேரங்களின் பெறுமதியால் சிறந்த எதிர்காலம் மாணவர்களுக்குக் கிடைக்கின்றது. ஆனால் மாறாக வீணடிக்கப்படுகின்ற விநாடிகள்கூட வலியின் சுமையால் தளம்புவதை நாம் அறிவோம். நம் முன்னே நிழலாடுகின்ற காலத்தை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும். நினைவுகளில் எழுகின்ற நல்ல எண்ணங்களை நாம் உரிய காலத்தில் செயற்படுத்த வேண்டும். ஏனெனில் சிந்தனைகளை நம்மை வழிப்படுத்துகின்றன. வளப்படுத்துகின்றன. 

இலக்கில்லாத வாழ்வு சக்கரங்கள் அற்ற வாகனம் போல் குறித்த இடத்திலேயே தரித்து விடும். எனவே செய்யப்போகின்ற ஒவ்வொரு செயல் பற்றியும் சிந்தித்து திட்டமிட்டு செய்வோமானால் நமக்கு மன நிறைவு ஏற்படும். அத்துடன் கால விரயமும் ஏற்படாது. நமது நேரம் நமக்காக உருவாக்கப்பட்டது. அதனை நாமே சிறப்பாகச் செய்ய வேண்டும். அந்நேரத்தில் சிறு துளியாகினும் தேவையற்ற விதத்தில் செலவளிக்கின்றபோது நம் மிகப் பெரிய பலம் பலகீனம் எனும் வலையினுள் சிக்கி விடும். காலத்தை சிறப்பாகப் பயன்படுத்தும்போது சாதனைகள் பல நம் வசமாகின்றன. எனவே காலத்தைச் சரியாகப் பயன்படுத்தி வெற்றி எனும் பாதையில் செவ்வோமாக.

ஜன்ஸி கபூர் - 05.05.2021


உணர்வுகள்


 

2021/05/01

நித்தம் உன் ஞாபகம்

 

விழிகளின் ஈர்ப்பால் கலந்த காதல்/

தழுவுகின்றதே நெஞ்சில் ஏக்கமும் சுமந்தே/

மெல்லிடை தழுவும் சேலை முடிச்சுள்/

ஒழிந்த வாலிபமும் குறும்பாச் சிரிக்குதே/


உன் கொலுசின் சத்தத்தில் உயிர்க்கும் /

பாதச் சுவடுகளும் பரவுதே உன்னோடு/

ஆசைகள் முடிந்த அத்தான் மனதுள்/

ஏக்கத்தின் ஓசைகள் வெடிக்குதே இமயமாக/


காமம் கிள்ளும் நறுமணக் கனாக்களில்/

உன் வாசம் உணர்வுள் மலருதே/

தேகம் சிலிர்க்க செந்நிற உதட்டின்/

மோக முத்தம் கற்பனைக்குள் உறையுதே/


கன்னக் கதுப்பில் செதுக்கிய வெட்கம்/

பக்கம் வருகையில் திரைக்குள் மறையுதே/

வானவில்லும் மையங் கொள்ளும் உன்னை/

வசந்தமும் மெல்லத் தொட்டுச் செல்லுதே/


உந்தன் புன்னகைச் சாரலில் நனைகையில்/

மெல்ல அழியுதே எந்தன் தனிமையும்/

வாழ்வின் முகவுரையாக உன்னை எழுதுகையில்/

உதிர்கின்றன சோகங்களும் உலகின் காலடியில்/


உள்ளத்தின் நினைவாக நீயும் நிரம்புகையில்/

மெல்லக் கரைகின்றதே சூழ்ந்திடும் தனிமை/

உறக்கத்திலும் உறங்காத உன்னோடு பயணிக்கையில்/

உன் ஞாபகமே மொழியாகிப் போகின்றதே/


ஜன்ஸி கபூர் - 01.05.2021