என் விடியல்கள்முகங் கழுவிக் கொள்கின்றனதினமும்உன் நினைவுகளில்!இருளின் இம்சைக்குள்தொலைய மறுத்த உறக்கமேனோ.........உன் விழிக்குள் பார்வையாய்உறங்கத் துடிக்கின்றது!அறிவாயா.....நீ யென்னைக் கடந்து செல்லும்ஒவ்வொரு கணங்களும்இறக்கை நெய்கின்றேன் காற்றோரம்சுவாசமாய் உன்னுள் வீழ!
காற்றுக்குள்ளும் உருவம் முளைத்தது
நீ காதல் தந்தபோது!முகிற் கூட்டங்கள் மெல்லவுடைந்துகற்கண்டாய் தரை தொட்டன!வேருக்குள்ளும் வியர்வை வடிந்ததுஉன் பார்வையென்னுள் வீழ்ந்த போது!என் தாய்மொழி விழி பிதுங்கினஉன் மௌன மொழியிறக்கம் கண்டு!உன் சிற்ப மேனி வர்ணமாய் வடிந்தென்கற்பனைக் கொடிகளின் அசைவுகளாய் ஆனது!ஆசை ஜூவாலைகள் உனை வளைத்தேகளவாய் காவு கொண்டன என்னருகில்!வாலிப வீரியத்தில் உன்னிளமைவலிந்தே போதையை நிரப்பிச் செல்கின்றது மெல்ல!மூங்கில் துளையேந்தி நெஞ்சை வருடுமுன்விரல்களில் பிணைந்தே கிடக்கின்றேன் ரேகையாய்!உன் புன்னகை என்னைக் கடக்கையில்............பொறிக்கின்றே னுன்னை என் இதழோரம்!
விழுந்தன மயிலிறகுகள் - உன்வார்த்தைகளில் பிசையப்பட்டுவசியமானேன் உன்னுள்!மொழியிழந்த நானோ - உன்னுள்இலக்கணம் தேடுகின்றேன்நம்மைப் பகிரும் அன்பின் வரிகளுக்காய்!இரவின் ரகஸியத்தில்நிரந்தரமாகும் நம் பரிமாற்றங்கள்இப்பொழுதெல்லாம்வேவு பார்க்கின்றன நம் கனவை!இயல்பாய் பேசுமுன் வார்த்தைகளோஇப்போதடிக்கடிஇடறுகின்றன என் விழிச் சாளரத்தில் சிக்கிவீம்பாய்!உவப்போடு நீ சிந்தும் பாடல்களால்உதிர்கின்றன பூவிதழ்கள் என்னுள்.......உன்னருகாமையை என்னுள் சிதறியபடி!சொற்களை அழகாய் நீவி - என்னுள்நீ கவியாய் சிறகடிக்கையில்..............என் கரங்கள் குவலயமாய் விரிந்துன்னைஅணைத்துக் கொள்கின்றன அழகாய்!காற்றிலே யுதிர்க்கும்உன் குரல் ஸ்பரிசங்களால்.........குவிந்து கிடக்கும் நேசமெல்லாம்வீழ்கின்றன சரனடைந்தே!காதலா.........அன்பா............நட்பா...........ஏதோவொன்றுநம்மைக் கடந்து செல்கையில் மட்டும்முறைக்கின்றாய் நிமிடங்களோடுபிரிவின் வலிக்கஞ்சி!
வாலிப தேசம் கண்டெடுத்த
வண்ணக்கொடி!
மலை முகடுகளை மறைத்தோடும்
நீர்வீழ்ச்சி!
இளமை ரகஸியங்களை
காற்றிலுதிர்க்கும் உளவாளி!
பருவத்து அலைவரிசைக்காய்
விரும்பப்படும் ஒலிபரப்பு!
பாவடைக் குடைக்காய்
தேர்ந்தெடுக்கப்பட்ட பொன்னாடை!
இடை நெரிக்கப் படையெடுக்கும்
நூற்படை!
குமரப் பருவத்தை அங்கீகரிக்கும்
ஒப்பந்தக் காகிதம்!