About Me

2020/08/09

தோள் கொடுக்கும் தோழனிருந்தால்


மனமது திசைமாறுகையில்
நிறுத்திடும் கரமாய்/

மடிந்திருக்கும் துன்பங்களையும்
விரட்டிடும் உருவாய்/

உணர்வின் மொழியாய்
உருக்கொள்ளும் நட்பே/

உண்மை அன்பில்
உயிர்த்திடும் அழகாய்/

உள்ளத்து வலியைத்
துரத்திடும் அன்பே/

ஊமைக் காயங்களுக்கும்
மருந்திடும் நொடிப்பொழுதில்/

தோள் கொடுக்கும்
தோழன் அருகென்றால்/

வாழ்நாளும் நீளுமே
வசந்தத்தின் துணையுடன்/

ஜன்ஸி கபூர்  



நலமோடு வாழ


பறக்குது காற்றிலே கொரோனாக் கொடி/
பதறித் துடிக்குது பாரும் நோய்முற்றி/
உதறுது ஆரோக்கியம் உயிரை வருத்தியபடி/
உழைப்போ ஏதுமின்றி உறங்குது ஊரடங்கில்/

உன்னத மனிதமும் உறவின் அருமையும்/
உணர்த்திய பாடங்களாம் உருண்டன நெஞ்சோடு/
இறுமாப்பில் நிமிர்ந்தோரும் இன்னலுடன் தலைகுனிந்தே/
வறுமைச்சுவை தானறிந்தே வாழ்வையும் புரிந்தனரே/

முகக்கவசம் மூச்சுக்காற்றின் முத்தமாய் அலைந்ததுவே/
அகக்கண்ணிலோ அச்சம் மொத்தமாய் வீழ்ந்ததுவே/
முத்திரையாம் கைக்கவசமும் இடைவெளியும் நலமாகும்/
முடிவுரையாய் ஆரோக்கியப் பயிற்சியும் நமதாகும்/

ஜன்ஸி கபூர் - 09.07.2020
 

அந்தந்த நேர வேடங்கள்

கருவறை சீராட்டும் உயிருக்கில்லை மாசு

உரு மாறும்போதே இழிகுணங்களும் வீசும்

உள்ளம் குமுறும் வெஞ்சினம் மறைத்தே

உதடுகள் குலாவும் நறுஞ்சுவைத் தேனில்


பச்சோந்தி மனமது பந்தலிடும் இழிகுணங்களும்

மெச்சிடும் உருவேற்று உலாவிடும் தீதுக்காக


இணையும் கரமதும் சுமக்கும் துரோகத்தை

இனித்திடும் வார்த்தைக்குள்ளும் ஊறிடும் நஞ்சும் 

இருப்பிடச் சூழ்நிலையின் உணர்வோடு வாழ்ந்திடும்

இவ்வுலக மாந்தரெல்லாம் மேடை நடிகரே மனமதில்


ஜன்ஸி கபூர்  

 

  


உறங்காத உண்மைகள்

 

முழுமதி முற்றத்திலே பறந்திடும் கவிகள்/
வழுக் காணா அற்புதப் படைப்புக்களே/
தழுவி யணைக்கையில் மணக்கும் செந்தமிழே/
முழுமையும் பெற்றாய் சிறந்த குழுமமாய்/

ஜன்ஸி கபூர்