About Me

2020/10/16

அம்மாவின் முந்தானை

 


அன்பை அள்ளிச் சொருகி அணைத்திடும்/

அம்மாவின் முந்தானை எனக்குப் பஞ்சனையே/

கோர்த்து நிற்கின்ற வியர்வைத் துளியினைப்/

பாசத்தில் ஒற்றியெடுக்கும் அன்பின் உருவது/


உழுதிடும் வெயில்ப் பூக்களும் உருக்கும் மேனிக்கே/

நிழலிடும் உயிர்க் குடைப் பந்தமது/

முந்தானைச் சிறகும் வருடும் காப்பினை/

எந்நாளும் போர்த்துகின்றேன் என்றன் வாழ்வினில்/


ஜன்ஸி கபூர் - 16.10.2020




2020/10/12

செக்கச் சிவந்தவளே

 செக்கச் சிவந்தவளே செதுக்கிய பொற்சிலையே/

உன்தன் விழியாலே உசுரதான் அணைக்கிறியே

செவந்தவுன் உதட்டில சிதறுறநீ சிரிப்பத்தான்/

அள்ளிச் சொருகிறேன் ஆச மனசுக்குள்ள/


வெக்கத்தில செவக்குறே வெள்ள மனசுக்காரி/

நெறைஞ்சிருக்குறே நெனைப்புல நெஞ்சோரம் அணைக்கலாமா/

சிணுங்குற கொலுசுக்குள்ள சிந்துறே எசயத்தான்/

அணைக்கிறேன் கனவுல அருகில வந்துடடி/

கண்டாங்கி சேலயில கண்டபடி சுத்துற/

கண்ணுக்குள்ள மொய்க்கிறே காவலுக்கு வாறேன்டி/


ஜன்ஸி கபூர் - 25.10.2020

 

  •  





2020/10/09

Azka Poem

 தாய் பாடும் தாலாட்டில்

சேய் தூங்கி போவது போல்

பொய் பாடும் தாலாட்டில்

மெய் தூங்கி போகிறதே

வேருரிஞ்சும் நீராலே

மரம் செழித்து நிற்பது போல்

உழைப்பாளி வியர்வையால்

முதலாளி வளர்கிறார்

அறியாமையில் ஆழ்ந்து

தூங்கியது போதும்

துயரைத் துடைக்க

Azka - 09.10.2020




tsul;Lk; xU ey;;y Njrk;

   J}a;ik NgZk; xU tsk;

ey;yij NgRk; jha; kf;fs;

   Kfj;jpy; re;Njhrk; nghope;J kyul;Lk;

Azka-2020.11.01

2020/10/07

காற்றினிலே வரும் கீதம்

 
காற்றில் உதிர்த்திடும்
...........காதல் கீதம்/
வற்றாத நதியாகி 
..........வஞ்சியைத் தழுவும்/

பற்றிடும் மூச்சினில் 
............பரவசம் தந்தே/
ஊற்றாய் மாறி 


...........உணர்வினில் கலக்கும்/

ஊற்றும் மகிழ்வை 
...........உள்ளத்துள்/
தேற்றுமே வலிதனை 
..........தெளிந்திடும் மனமே/

ஜன்ஸி கபூர் - 16.10.2020