நீயே என்னுறவாகி


மெய் காதல்
மெய் தீண்டுமோ...............!

அழகான இம்சை கரைத்து - நிதம்
பொய்யுரைத்தாய்........

உலர்ந்தவுன் னிதழ்கள் ஈரலிப்பில்
தோய்ந்து கிடக்க!

இருள் முக்காடிட்ட - பல
இராக்கள்..............
மௌனத்தி லுறைந்து கிடக்க

இப்பொதெல்லாம் - நம்
அலைபேசியின் குசுகுசுப்பை
காதல்
மொழிபெயர்த்துக் கொள்கின்றது
இரகஸியமாய்......!

லப்டொப்பில் வுன் முகம் திணித்து
என்.........
லப் டப் அதிர்வினை - நீ
தினம் ருசிக்கையில்.............

வெட்கித்துக் கிடக்கும் தலையணைகள்........
மிரட்சியோடுன் நினைவுகளைப்
பத்திரப்படுத்துகின்ற - நீயே
என் உறவென!
3 comments:

 1. லப் டப் என்று ரசித்தேன்...

  ReplyDelete
  Replies
  1. :) நன்றி.......என் இருதயமும் உங்கள் விமர்சனம் கண்டு மகிழ்வோடு துடிக்கின்றது

   Delete
 2. ke this.

  Kalaimahan Fairooz என்லெப்டொப்பில் உனைக்கண்டு
  நீபோலும் பசளையானேன் நான்!
  உன் மூச்சுக்காற்றில்
  என் உயிர்க்காற்று
  விரைந்தெழுகிறது
  மெய்க்காதல் இதுவென்று!

  ஸ்பரிசமில்லாத
  லெப்டொப் தொடுகை மட்டுமேகொண்ட
  என் கரங்கள்
  உன் சிவந்த 'லிப்ஸ்' கண்டு
  சுவைத்துக்கொள்கிறது
  அருகில் நீயென்று!

  எனக்காக பசளையானாய்நீ
  உன்னில் நான்
  பசளையானேன் பார்!
  மின்சாரம் தடைப்பட்டதா?
  விரைந்து ஏற்று
  விளக்குகளை.....!
  உனைப் பத்திரப்படுத்துகின்றன
  என் மின்சாரம் இங்கு!

  -கலைமகன் பைரூஸ்

  Jancy Caffoor wow........nice

  Shamin Suhirdha இங்க கவிதை போட்டி நடக்குதாங்க

  Fazan Abdul கவிதாயினி எங்கள் மாவட்டத்தின் அடையாளம்

  ReplyDelete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை