2012/11/29
நீ போகாதே
இதயத்தின் சொப்பனமாய்
முடி சூட்டிக் கொண்டன
உன் மீதான தவிப்புக்கள்!
கவனித்தாயா !
நீயென்னை நினைக்கும்
ஒவ்வொரு நொடிகளுமே ..........
விக்கல்............
கவிதைகளை வாசிக்கின்றது!
உன் சோலை..........
பொத்திக் கொண்ட ரோஜாக்களின்
விரல்களில் கூடக் காயம் !
முட்களை முடித்து வைத்தேனதில்.........
தடைக்கல்ல..............பாதுகாப்பிற்கு!
ஏன் மறக்கின்றாய்..............!
யதார்த்தங்களால் தரிசான - உன்
மன பூமியில் - நிதமும்
என் கண்ணீர்க் கீற்றுக்கள்தானே
நம்
காதலை ஈரலிப்பூட்டுகின்றன!
அறியாயோ............!
அனல் கூட அன்பால்
புனலாகும்!
நம்பிக்கையிழக்காதே........!
வானாளோரம் வசந்தம் கூடு கட்டும்
காத்திரு காலம் உன் வசம்!
என் வகிட்டினில் - நீ
பதித்த ஈரமெல்லா மின்னுமே உலராதிருக்க
உலறுகின்றாயே
எனைத் துரோகியாக்கி ........
உன் னிதய நரம்போரம்
அலைந்து கொண்டிருக்கும் என்னை
உறிஞ்சிக் கொள்.....
சாறு பிழியு மென் புன்னகையால்
உன் காதல் வாழட்டும்!
கண்ணா.............!
சாதலிலல்ல காதல்.........
வாழ்தலுக்கே காதல்!
உணர்வுகளை மயக்கும்
அழகிய விசம்தான் காதலென்பதை....
இன்றுதான் அறிந்தாயா!
என்னுள் வீழ்ந்து கிடக்கு முன்னை
நானின்னும் மறுக்காத போது...........
எனை மட்டும் நாட்டி விட்டு
போகாதே நீ மட்டும் தனி வழியே!
காதல் பூங்கா வனமல்ல............
போராட்ட களம்!
கனவுகளுக்குள் கல்லெறிந்து விட்டு- உன்
நிஜ முகம் காட்டு!
அன்பால் உலகம் நெய்து
அணையாமல் காத்திருக்குமெனை விட்டு........
போகாதே கண்ணா போகாதே!
Subscribe to:
Post Comments (Atom)
ரசித்தேன்...
ReplyDeleteநன்றி
Delete