2012/11/26
அறியாமலே
தொலைவில்............
தெருநாய்கள் ஊளையிடுகின்றன
பலமாய்..............!
கடிகார விரல்கள்
சுட்டி நிற்கின்றன
பன்னிரெண்டைத் தொட்டு !
என்றோ யாரோ.............
விட்டுச் சென்ற பேய்க் கதைகள்
பல்லிளித்து எனை முறைக்க..........
நரம்புகளின் புல்லரிப்பால்
விழிகளில் பீதி யுறைய.............
நிசப்த நிழல்களிலெல்லாம்
"அசாதாரண" தடங்களின் உயிர்ப்பு!
விழிகளை இறுக்குகின்றேன் எனை மறைக்க
விளக்குகளை அணைத்தவாறே.........
மீண்டும் அருகில் ஊளைகளும்
காலடியதிர்வுகளும் எனைச் சிதைக்கும் நேரம்.....
மேசையில் சாய்ந்து கிடக்கும்
பரீட்சை விடைத்தாள்களும்............
சிவப்புப் பேனாவும்............
மின்விசிறி சுழற்சியில் சிக்குண்டு
காத்துக் கிடக்கின்றன............
என் தூக்கம் அறியாமலே!
Subscribe to:
Post Comments (Atom)
அருமை... பொறுப்பான வரிகள்...
ReplyDeleteநன்றி தனபாலன்
ReplyDelete