வலிக்கிறது அப்பா!அப்பா...............!

பாசங் கொண்டோருக்கு
அழகு நாமமிது!

ஏனப்பா ஹிட்லரானீர்.............
தப்பப்பா........................................

உங்கள் இராச்சியத்தால்
என்னுள் முடிசூட்டப்பட்டவை
விரக்தி மட்டுமே!

அண்டம் பிளக்கும் அணுவை விட
அபாண்டமா யுதிருமுங்கள் வார்த்தைகள்
கொடியவை யப்பா!

உங்களால்..............
ஒவ்வொரு விடியலுமே யிங்கு
பொய்த்துத்தான் போகின்றன!

ஆணாதிக்கமும் சிறைப்படுத்தலுமே
நீங்கள்.....................
எமக்கிட்ட விலங்குகள்!

சிரிக்க எனக்கும் ஆசைதான்............
நீங்கள்
இன்னுமதற்கு அனுமதிக்கவே யில்லையே!

நீங்களும் அம்மாவும்
இணையா தண்டவாளமானதில்..............

உங்கள் முரண்பாடுகளைத் தினம்
தரிசிக்கும் ...............
நீதிபதியாய் நானிங்கு!

வாழ்ந்து முடித்த நீங்கள்........
எனக்கு......... இன்னும்
வாழக் கற்றுக் கொடுக்கவில்லை!

இன்னும் நான் தளிர்க்கவேயில்லையே
அதற்குள் தரித்தே விட்டீர்கள் ..................
அந்தரிக்கும் பட்ட மரமாய்!

அப்பா..................!
ஆண்களெல்லாம் உங்கள் வர்க்கம் தான்!
ஆண்மையில் வெறுப்புண்டு............
தனிமைப்பட்டேன் திருமணம் மறுத்து!

நீங்கள்.............
குளவியாய் குத்தக் குத்த
பாசமெல்லாம் விசத்தின் கலவிக்குள்
மரத்துத்தான் போனது!

சந்தோஷம் தேடியலைகின்றேன்............
கரம் நீட்டியழைக்கின்றன சமாதிக ளென்னை !
மறுக்கப் போவதில்லை!

இப்போதெல்லாம் கவனித்தீர்களா......
காற்றுக்கும் விழி முளைக்கின்றது
கண்ணீரோடு எனைத் தழுவ!

கனவுகள் கூடச் சுடுகின்றன....
நீங்கள் தரும்
வெம்மைச் செறிவால்!

ஐயகோ...............எனைச்
சிலுவையில் அறையாதீர்கள்!
உயிரின் வலி தாளமுடியவில்லை!

என் விதி யாருக்கும் வேண்டாம்
இங்கு...............
அன்பு செய்ய யாருமேயில்லை!
3 comments:

 1. வலியுள்ள வரிகள்...

  மாறட்டும்...

  ReplyDelete


 2. Kalaimahan Fairooz //அப்பா..............ஆண்களெல்லாம்
  உங்கள் வர்க்கம்தான்............!
  ஆண்மையில் வெறுப்புண்டு
  தனிமைப்பட்டேன் திருமணம் மறுத்து!// சிந்திக்கத்தூண்டும் வரிகள்....

  Paramasivam Cyclesiva : (

  Muthu Satheesh Kumar Akka

  Kalaimahan Fairooz பதில் கவிதை வந்துகொண்டிருக்கிறது மகளே!

  Fazan Abdul எனக்கு மட்டும் முழுவதுமாய்ப் புரிகிறது.... ஏன் என்ன நடந்த?

  Kalaimahan Fairooz வலிக்கிறது எனக்கும்தான் மகளே!
  ---------------------------

  மகளே...........................!

  யாழினிலும் குழலினிலும்
  அழகிய நாமம்தான்......

  ஏன்மகளே....... குத்திக்காட்டுகிறாய்
  தப்புமகளே.....
  உனது விரக்திக்கு
  நான்தான் காரணமா?

  அண்டம் பிளக்கும் அணுவைவிட
  அபாண்டமாய் நான் வார்த்தைகளை
  உதிர்கின்றேனா?
  பூச்சியங்கள் போட்டுப் பெரிதாக்கும்
  உன்தாயின் உச்சரிப்புக்கள்
  நீ கேட்டும்
  ஆணாதிக்க வெறி என்கிறாய் என்னில்....!

  உண்மைதான்
  நீ சொல்வது......
  எங்களால்........
  உன் வாழ்வு பொய்த்துப்போனது
  உண்மைதான்.....!

  ஆணாதிக்க வெறிகொண்டவர்கள்
  சமூகத்தில் இருக்கலாம் மகளே!
  ஆனால்
  நீ சொல்வது போல்
  ஆணாதிக்க வெறியில்
  உன் தாயுடன் நான் நடந்துகொள்ளவில்லை
  மாறாக
  உன்தாய்தான்.....
  எனக்குச் சமனாக அவள்நிற்பதற்கு
  எங்கும் உலாவருதற்கு
  என்னிடம் விலங்கினை நீக்குக
  என்று சொன்னதால்
  நான் பதிலாக அறைந்ததால்
  நீ
  பால்ய பருவங்கள் போய்
  பத்தும் பலது ஆசைகள்
  சுமந்துள காலம்வரை
  ஏங்கிநிற்க வைத்தது மகளே
  என் குற்றத்தினாலல்ல
  அவள்
  கைகேயி வரம் கேட்டதனால்
  வந்தவினை மகளே....
  அவள் கைகேயியானதால்
  வந்த வினை மகளே!

  உன் தாயால்
  என் பத்தினியால்
  அவள் பின்புத்தியினால் வந்தவினையால்
  நீ இன்னும் சிரிக்காமல்
  சினுங்குவது எனக்குப் புரிகிறது
  என் மகளே!

  பாழாய்ப் போன எனது சுதந்திரத்திற்காய்
  உனையும் - உன்தாயையும்
  கடிவாளமிட்டேனா?
  இல்லவே இல்லை....
  இன்ற நான்
  சந்தோசம் தேடி
  அலைகடலாக மகளே!
  எனது உள்ளம் மரத்துப்போய்
  வெறும் சடமாக மட்டுந்தான் நான்!
  எனது
  நிறமூர்த்தங்கள்கூட
  இப்போது நிறம் காட்ட மறுக்கிறது....!

  என் கண்ணீரைத் துடைத்துச் செல்லும்
  காற்றைக்கூட
  நான் சபிக்கிறேன் மகளே!

  உன் சந்தோசமிலா
  குத்தலான வார்த்தைகள் கண்டு
  என் உள்ளம் ஆட்டம் காண்கிறது....
  கட்டாற்று நீராய் வழிந்தோடும்
  என் இரத்தநீரின்
  கரைகாணக்கூட நான் நினைக்கும்
  என்னவள்
  ஆம்
  உன் தாய் வரமறுக்கிறாளே....!

  மகளே....
  நான் ஆணாதிக்க வெறியனா?
  என்னை எப்படியெல்லாம் சொல்கிறாய்
  உன்னுடைய கீறல் வார்த்தைகள்
  என்னைச் சல்லடையாக்குகின்றன மகளே!

  என்னவளுக்கு
  அறைய எனக்கு உரிமையில்லையா?
  அடித்த கை அணைக்கும் என்பது
  பொய்யாக இருக்கிறது .....!

  ஏ.... என் மகளே!
  என்னை சிலுவையில் அறையாதே!
  வலி தாளமுடியவில்லை.....

  உன் விதி - என் விதி
  யாருக்கும் வரக்கூடாது மகளே!

  உன் தாயோடு உள்ள
  உனக்கு எங்கே தெரியப்போகிறது
  எனது மூச்சுக்காற்றின் வெம்மை?

  சிந்தி.... கண்ணீர் சிந்து....
  நான் ஆணாதிக்க வெறியனா?

  -கலைமகன் பைரூஸ்
  2012 / 11/ 28 9:25

  Nizam Farook அருமை வலிக்கிறது .......

  Sujith Kumar Balan haha

  Kalaimahan Fairooz http://kalaimahanfairooz.blogspot.com/2012/11/blog-post_28.html

  Rajakavi Rahil sakothari aankal elloraiyum neenkal saadi iruppathu thappo.neenkal sanththiththa appaa or unkal appaa appadi irukkalaam.mikachchiranththa appaakkalum ,mikachchiranththa aankalum niraiya irukkiraarkal.ellaa appaakkalum enbathai neenkal thavirththirukkalaam.
  6 hours ago · Unlike · 2

  Jancy Caffoor அப்பா...........................!

  அழகு நாமம் தான் ............
  பாசங் கொண்டோருக்கு!
  ...........See More
  13 minutes ago · Edited · Like

  ReplyDelete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை