About Me

2012/09/06

கவி தந்த சோதரன்

 சகோதரன் கலைமகன் பைரூஸ் அவர்களின் பார்வையில் நான்----





அழிவதூஉம் மாறுவதூஉம் யாக்கை- பயனில
நட்டார்கண் ஒட்டுதலே திரு

சிற்றுடல்க்கு ஊங்கு முள்ளம், சிறுமைதான்
அன்புடை உள்ளம் உயரும்

அரிவை அறியவை போற்றுதல் அழகு
அறியாயின் பேதை எனல்

சிறுமை இளமை மூப்பு மூன்றின்கண்
வனப்பு நோக்க லிழுக்கு

போற்றினும் போற்றுக நல்லுளமே என்றும்
அழகினை நோக்கினின் அழிவு

ஜன்மத்திலேது பயன் அழகினையே உன்னின்
சிறுமைக் குணமல்லோ அறி

வேறு

அறிவிலுயர்ந்தவளாய் நல்லறிவு தருபவளாய்
அஞ்ஞானம் களைபவளாய் ஆதரவு தருபவளாய்
இறைமறை தனை நெஞ்சத்தி லேந்தியவளாய்
இன்னலூடும் இன்முகத்திலிருப்பவள் ஜன்ஸி

இளமை யின்பம் ஏதென்பவளாய் - இளசாய்
இதமாய் உளத்தை பேணியிருப்பவளாய்
கிழடு வந்தாலும் கூட பாசத்தின் உறைவிடமாய்
கிஞ்சித்தும் பெருமை யிளாதாள் ஜன்ஸி!

கிள்ளைமொழி தருபவளாய்- சீராய்ப்
பருவ மாறு கடந்தவளாய் ஆனாலும்
இல்லாத பேறுக்காய் ஏங்கமறுப்பவளாய்
இம்மையில் இனிதிருப்பவள் ஜன்ஸி!

சகோதரியாய் அன்பான சகியாய் - அக்காளாய்
சலனமிலாது வலம்வரும் இவள்க்கு வயதேது
விகாரமிலை உண்மை யன்பீதில் சொன்னேன்
விந்தை இவளுன்மை கண்டிடின் எலோரும்!

எல்லாமுந் தருபனை தந்திடு மூரினில்சீராய்
எழுத்தகரம் முதற்கொண்டு கற்றிட்டாள்
நிலையிலா பாரினை உன்னி தேவையதும்
தேவையிலை என தெம்மாங்குப் பாட்டிசைப்பாள்!

ஜன்ஸி இவள் ஜன்ஸிராணியின் வீரத்திற்றான்......
ஜன்ஸி இவள் இலக்கியராணிதான் தகைமிகு
ஜன்ஸி இவள் உருகண்டு உறவிலை எம்மில்
ஜன்ஸியின் உரு எவ்வாறிருந்திட்ட போதும்........

பேதையரை வழுத்தும் போதையிவன் என்பரோ
பேரே யழிந்திடினும் உண்மைக்கு கரம் நீளும்
நீதமாய் நல்ல படையல்கள் பல தரும்
பத்தினித் தமிழின் நல்லாளிவளை படிப்பேனே!

- தமிழன்புடன் சகோதரன் கலைமகன் பைரூஸ்
2012.09.05


(இன்று இந்திய ஆசிரியர் தினம் - ஆசிரியை எனும் தகையுடையாள் இவள்க்கு வாழ்த்துக்களுமுண்டு)

தமிழ்மொழியில் புலமை நெய்த
அழகுக் கவியின் ஆளுகையே!
உங்கள் கவி வார்த்தை கண்டு
புளாங்கிதத்தி லென் மனமின்று! - இவள் .....ஜன்ஸி


- Ms. Jancy Caffoor -

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!