கருவறை
உரு தந்தது
குருதியில் பரம்பரையலகுகளையும்
மாற்றீடு செய்தவாறே!
மூச்சுக்காற்றில்
மோதியெழுந்த முதல் ஸ்பரிசமாய்
சிரித்தார்
"அம்மா"
அடக்குமுறை மந்திரங்களை
உச்சரித்தே
களைத்துப் போனார்
"அப்பா"
உடன் பிறப்புக்களோ
முரண்பாடுகளில் உடன்படாமலே
பிரிந்தனர்- தம்
இடங்களை மாற்றி!
உறவுகளோ
கற்றுத் தந்தனர் - பல
பாடங்களை இலவசமாய்!
நட்புக்களோ
சுயநலங்களை விட்டுச் சென்றனர்
பட்டும் படாமலும்!
இத்தனைக்கும் மத்தியில்தான்
அவன்
எனக்குள் அறிமுகமானான்!
அவன்
இராத்திரிகளின் விளக்கொளியில்
விட்டில்களாய்
நசிந்து கிடக்கும் கண்ணீர்த்துளிகளை
களவாய் உறிஞ்சியெடுத்தே
கலைகளுக்கும்
பேனாவானவன்!
தோற்றுப்போகும் தருணங்களில்
தைரியத்துடன்
தன்னம்பிக்கையையும்
கற்றுக் கொடுத்தவன்!
மரணம் எனக்குச் சுமையல்ல..
மனிதம்
மரத்துப் போனவர்களுடன் வாழ்வதை
விடவும்!
இருந்தும்
இவ்வுலகில் எதுவுமே நிரந்தரமில்லை
நிதர்சனத்துடன்
தொடர்கின்றதென் வழிப்பயணம்!
- Jancy Caffoor-
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!