வாழ்க தமிழ்
+++++++++++++
வையகம் வாழ்த்துகின்ற வண்ணத் தமிழும்/
வளமது குன்றாமல் வாழ்ந்திடும் பல்லாண்டே/
உளமது மகிழ்ந்திட உணர்விலும் பூத்திடும்/
உன்னத மொழியாம் எம் தமிழே/
மூத்தோர் போற்றிய முத்தமிழ்ச் சந்தத்தில்/
சத்தான இலக்கண யாப்பும் நடையுமே/
எத்திக்கும் ஒலிக்கின்ற செந்தமிழக் குரலினில்/
தித்திக்கின்றதே மனங்களும் திகட்டா அமுதேந்தி/
வேற்று மொழியினில் இல்லாச் சுவையுடன்/
பற்றுகின்ற சொற்களில் படருதே அழகும்/
இலக்கியங்கள் சுமந்த இன்பத் தொனியினில்/
இதயங்கள் மகிழுதே இளைய தமிழால்/
அருந்தமிழ் பருகையில் அகிலமும் வியக்குதே/
அறத்துடன் மொழிகையில் அதிசயிக்குதே தொடர்பாடலும்/
வீரம் சுமக்கையில் வெற்றியின் முரசோடு/
ஒலிக்குதே செவியினில் தாய்த் தமிழே/
அஸ்கா சதாத் - 8.12.2020
----------------------------------------------------------------------
உலா வரும் நிலா
+++++++++++++++++++
இருளில் படர்கின்ற வெண்ணிலவே/
ஒளிகின்றாய் பகலின் ஒளியினில்/
குவிகின்றாய் உணர்வினில் கவியாக/
புவியின் உறவும் நீதானே/
அஸ்கா சதாத் - 9.12.20
-------------------------------------------------------------------------
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!