1.கல்லறையும் கார்த்திகையும் கல்நெஞ்சைக் கரைத்திடுமா
---------------------------------------------------------------------------------------------
உதிரம் துளைத்தே உமிழ்ந்த சன்னங்கள்/
உயிரினை அறுத்தே உயிர்ப்பித்ததோ கண்ணீரினை/
புதைகுழிகளில் வீழ்ந்தே துளிர்க்கும் வீரம்/
வெறும் கதையல்ல வென்றெடுக்கும் சரித்திரம்/
இதயம் சுமந்த இலட்சிய வேட்கையில்/
இன்னுயிர் துறந்தே மீளாத்துயில் கொள்ளும்/
கல்லறைப் பூக்களின் வாசம் கரைத்திடுமோ/
கல்நெஞ்சாகி மனிதம் மறந்த மாக்களை/
விதைத்த கனவுகளைச் சிதைத்த போரால்/
விழுந்த விதைகளும் மீள எழுகையில்/
மயானத்தில் ஒளிரும் கார்த்திகை தீபங்கள்/
இருட்டின் நிழலுக்குள்ளும் விடியலைத் தேடுகின்றனவே/
ஜன்ஸி கபூர் - 22.11.2020
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!