About Me

2020/12/13

குற்றம் குற்றமே

 



 

 

 நாவோடு செந்தமிழ்த் தேன் சுவையிருக்க/

நோவெடுக்க உதட்டில் மொழிகின்றனர் பிறமொழியை/

தாயக நிழலுக்குள் தூய்மை வாழ்விருக்க/

நாடுகின்றனர் அந்நிய தேசத்தில் அணைந்திடவே/


அனுபவம் தராத அறிவினை யேற்றி/

அடைக்கலமாகின்றனர் ஏடுகளுக்குள் திறனற்றுக் கற்க/

மனிதம் தொலைத்து அணிகின்ற வேடங்கள்/

புனிதம் இழந்தே புகழையும் பறிக்கும்/


உறவுகள் வருந்துகையில் பஞ்சணை உறக்கம்/

உணரார் உணர்வுகளை மிதித்தல் குற்றமென/  

தவறுகளை மறைத்தே வாழ்ந்திட நினைக்கையில்/

ஏறுகின்றதே குற்றங்கள் நிம்மதியும் அழிய/


 ஜன்ஸி கபூர்  - 13.12.2020

-----------------------------------------------------------------------------------------

குற்றம் குற்றமே

-----------------------

நாவில் செந்தமிழ்த் தேன் சுவையிருக்க/

நாகரிக உலகில் கைகோர்க்கின்றனர் பிறமொழியுடன்/

தாயக நிழலின் அருமை புரியாமல்/

நாடுகின்றனர் அந்நிய தேசத்தில் வாழ்ந்திடவே/


அனுபவம் இல்லாக் கல்வியைக் கற்றால்/

அடுத்தவரிடம் கையேந்தும் அவலம் நீளும்/

மனிதம் தொலைத்தே அணிகின்ற வேடங்கள்/

புனிதம் இழந்து தவற்றில் குவியும்/


சட்டம் மதிக்காமல் பண்பாடும் பேணாமல்/

கழியும் பொழுதுகள் கறைகள் சூழுமே/

செய்கின்ற குற்றங்கள் சிதையாது தொடரும்/

உண்மையை ஏற்காப் பண்புகளும் இழுக்கே/


ஜன்ஸி கபூர்





No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!