About Me

2020/12/10

மகிழ்வுப் பயணம்


 

நீரோட்ட மடியும் தாங்குகின்ற பாதையில்/

வேரோடுகின்றதே உறவுப்பாலமும் வேற்றுமைகளை மறைத்தே/

ஓடையை ஊடறுத்த நடைப்பயணச் சுவட்டினில்/

ஓற்றுகின்றதே உற்சாகமும் அழகை உறிஞ்சியபடி/


விழிகளும் ரசிக்கின்ற அழகிய இயற்கைக்குள்/

எழுதியதே விஞ்ஞானமும் அறிவின் விரல்களால்/

நழுவும் காற்றையும் ஆற்றுக்குள் விழுத்திடாது/

தழுவுகின்றதே தேகமும் குளிரை ஏந்தியபடி/


பேதங்களைக் களைந்தே பயணத்தில் இணைவோர்/

சேதமின்றி மறுகரையைச் சேர்ந்திடுவார் அறிவியலால்/

வான் கருணையால் வாழ்கின்ற பசுமையைக்/

காண்கின்ற மனங்களும் களிக்கின்றதே இரசனைக்குள்/

 

ஜன்ஸி கபூர் - 10.12.2020

 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!