About Me

2021/05/08

உங்களுடன் நான் - 1


அன்பு என்பது அழகான உணர்வு. அது உள்ளத்தில் பரவியிருக்கும்போது உணர்வுகளும் உறுதி பெறுகின்றன.

அன்பு இயல்பாகவே வரவேண்டியதொன்று. நம்மை உதாசீனப்படுத்துபவர்களிடமிருந்து அது கிடைப்பதில்லை. எனவே நம் அன்பை உணரும்போது அடுத்தவர்கள் நம்மைக் கௌரவிப்பார்கள். அதுவரை நாம்தான் காத்திருக்க வேண்டும்.

காலம் நிலையற்றதைப் போல் மனிதர்கள் மனமும் நிலையற்றதுதானே. சூழ்நிலைகளும், சுயநலங்களும் அவர்களின் போக்கை மாற்றக் கூடும். துரோகங்கள் நம்மை வதை செய்யும்போது அவர்களைக் கடந்து செல்வோம். நமது அமைதியும், பொறுமையும் நம் பண்பின் வெளிப்பாடுகளாக இருக்கட்டும்.

துன்பம் வரும்போது நம் நிலையைக் கண்டு வருந்துவோர் அருகி விட்ட நிலையில், நமக்கு தோள் கொடுக்க ஒரு உறவு இருந்தாலும்போதும். வலியை வெல்லும் வலிமை நமக்குக் கிடைக்கும்.

எக் காரணத்தினாலும் நம்மீதான நம்பிக்கை உடையும் விதத்தில் நாம் செயற்படக் கூடாது. ஏனெனில் அவநம்பிக்கை தருகின்ற பார்வை வாழ்வின் நிம்மதியைக் கெடுத்து விடக்கூடியது.

ஜன்ஸி கபூர் - 08.05.2021

  • Love is a beautiful feeling. Feelings are also confirmed when it spreads in the soul.
  • Love is something that comes naturally. It is not available from those who ignore us. So when we feel our love others will honor us. Until then we just have to wait.
  • The human mind is as unstable as time itself. Circumstances and selfishness may change their course. When betrayals torment us we pass them by. May our peace and patience be manifestations of our character.
  • Even when we have a relationship to give us a shoulder to go, those who regret our situation when suffering comes are gone. We get the strength to overcome pain.
  • We must not act in a way that undermines trust in ourselves for any reason. Because the vision of despair can ruin the peace of life.

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!