இலங்கையில் தற்போது வேகமாகப் பரவி வருகின்ற கொவிட் மூன்றாம் அலையின் பாதிப்பில் தற்போது கர்ப்பிணித் தாய்மாரும் உள்ளடங்கி வருகின்றனர். ஒருவர் மரணித்துள்ள நிலையில் 130 இற்கும் மேற்பட்டோர் தொற்றாளர்களாக இனங் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிசுவின் துடிப்பினை தன்னுள் ஏந்திக் கொண்டிருக்கின்ற ஒவ்வொரு தாயும் கொரோனாவின் பிடியிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளக்கூடிய தேவைப்பாடு உள்ளது.
எனவே கூறப்பட்டுள்ள பின்வரும் சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
- அத்தியாவசிய காரணங்களை தவிர வேறு எச்சந்தர்ப்பத்திலும் எதற்காகவும் வீட்டை விட்டு வெளியேறாதீர்கள்.
- காற்றோட்டமற்ற இடத்தில் தரித்திருப்பதை இயன்றளவு தவிர்த்தல்.
- எப்பொழுதும் உரியவாறு முகக்கவசத்தை அணிதல்.
- நபர்களுக்கிடையான தூரத்தை உரியவாறு பேணல்.
- மரண உற்சவம் போன்ற சன நெரிசல் மிக்க இடங்களுக்கு செல்லாதிருத்தல்.
- எப்போதும் சவர்க்காரம் இட்டு இரு கைகளையும் கழுவி சுத்தமாக வைத்திருத்தல்.
- உரியவேளைகளில் கிளினிக்கிற்கு செல்வதிலும் மற்றும் சிகிச்சைகளைப் பெறுவதிலும், ஏற்படுகின்ற தாமதம் காரணமாக கர்ப்பிணித் தாயினதும் கருவிலுள்ள சிசுவினதும் ஆரோக்கியத்திற்கு இடையூறு ஏற்படலாம்.
- கர்ப்ப காலத்தில் ஏற்படுகின்ற காய்ச்சல், குருதிப்பெருக்கு, கடுமையான தலையிடி, மூச்செடுப்பதில் கஷ்டம், பார்வைக் குறைவு, வலிப்பு, நெஞ்சில், வயிற்றில் ஏற்படுகின்ற வேதனை, சிசுவின் துடிப்புக் குறைவு, உடல் வீக்கம், அத்துடன் வேறு ஏதாவது கடினமான அசௌகரிக நிலை ஆபத்து சமிக்கைகளாக அடையாளம் காணப்பட முடியும். இவ்வாறான ஆபத்தான சமிக்கை தோன்றினால் உடன் வைத்தியசாலைக்கு செல்வது கட்டாயமாகும். அது தொடர்பில் உங்களுடைய குடும்ப நல சுகாதார உத்தியோகத்தருக்கு அறிவியுங்கள்.
- கர்ப்பிணியான உங்களுடைய பாதுகாப்பு தொடர்பாக,கொவிட் நோய்த் தொற்றிலிருந்து உங்களை தவிப்பதற்குரிய உரிய சகல ஏற்பாடுகளும் வைத்தியசாலையில் செய்யப்பட்டுள்ளது. ஆதலால் அவசிய வைத்திய சிகிச்சை பெற்றுக்கொள்ள ஒருபோதும் தயங்கவேண்டாம்.
- உங்களுடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தால் அல்லது கொவிட் நோயாளி என சந்தேகிக்கப்படும் நபரொருவர் உங்கள் வீட்டில் வசித்தால் அது தொடர்பாக உடனடியாக உங்களுடைய குடும்ப நல சுகாதார உத்தியோகத்தருக்கு அறிவியுங்கள். உங்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக முடிந்தவரை அவரிலிருந்து விலகி இருங்கள்.
- தற்செயலாக, உங்களுக்கு ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் கொரோணா நோய் அறிகுறி உள்ளதாக சந்தேகித்தால் உடனடியாக உங்கள குடும்ப நல சுகாதார உத்தியோகத்தருக்கு அறிவியுங்கள்.
- அவசிய சிகிச்சைகளை உடனடியாகப்பெறுங்கள். வைத்தியசாலைக் கட்டமைப்பு உங்களுக்காக தயார் நிலையில்
- இச்சகல நிகழ்வுகளுக்கிடையே உங்களுக்கு ஏதாவது மன உளைச்சல் தோன்ற முடியும். அதை தவிர்ப்பதற்காக, மனதை எப்போதும் நிதானமாகவும் தெளிவாகவும் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள்.
- தேவைப்படும் எந்தநேரத்திலும் உங்களுடைய குடும்ப நல சுகாதார உத்தியோகத்தரை அல்லது 1999 சுவசெரிய தொலைபேசி சேவையினூடாக வைத்தியரொருவரை தொடர்பு கொண்டு உங்களுடைய பிரச்சனை தொடர்பான காரணங்களை கலந்தாலோசிக்கவும் முடியும்.
- பகிர்வு- 09.05.2021
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!