About Me

2012/08/13

சத்தியமும் அசத்தியமும்


நம் வாழ்க்கை அற்புதமானது. நம்  வாழ்வின் ஒவ்வொரு  நகர்வும், இயற்கை அருட்கொடைகளுடன் பிண்ணிப்பினைந்துள்ளது. அவ்வியற்கையழகை, தேவையை நிராகரிப்போர் இப்புவியின் மனிதப் பிறவிகள் எனும் அந்தஸ்தைப் இழந்து விடுகின்றனர்.

ஒவ்வொரு படைப்புக்களும் இறைவனால் படைக்கப்பட்டு , அவற்றுக்கான வாழ்வியல்  விதிமுறைகளும்  வகுக்கப்பட்டு, இப் பிரபஞ்சத்தின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.அவை உயிருள்ளவை, உயிரற்றவை,சக்தியென பேதப்பட்டவாறே, ஒவ்வொன்றும் தத்தமது இயல்புகளினால் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டுக் காணப்படுகின்றன. ஆனாலும் இவ் வேற்றுமைகளிலும் ஒற்றுமையிருப்பதன் மூலமாக நமது வாழ்விலும் இவை தொடர்புபட்டுள்ளது.

ஆறறிவு படைத்த உயிருள்ள மனிதன் தன் செயல்களினாலேயே தன்சூழலில் வாழும் ஏனைய ஐந்தறிவு  கொண்ட மாக்களிலிருந்தும் வேறுபடுகின்றான். அவனாற்றும் செயல்களில் கலந்துள்ள நன்மை, தீமைகளிலிருந்தே மறுமை வாழ்வுக்கான அத்திவாரமும்  பலமாக இடப்படுகின்றது. நாம் செய்கின்ற செயல்களுக்கான அடித்தளமாக  சத்தியமும், அசத்தியமுள்ளடங்குகின்றன.  செயல்களினடிப்படையில் நம்மை இனங்கண்டு, இயற்கையுடன் உவமித்து ஏகவல்ல இறைவன்  அருளிய பல திருவசனங்களை அல்குர்ஆன் தன்னகத்தை ஏந்தியுள்ளது. அவற்றுலொன்று -


"வானத்திலிருந்து நீரை அவன் இறக்கினான் பின் ஓடைகள் அளவுக்குத்தக்கவாறு  (நீரைக் கொண்டு)ஓடின. பிறகு வெள்ளம் ( நீருக்கு மேல் மிதக்கும்) நுரையை மேலே சுமந்து சென்றது. (இதுபோன்றே) ஆபரணங்களையோ அல்லது சாமான்களையோ செய்வதற்காக நெருப்பில் அவர்கள் (உலோகங்களை) உருக்குவதிலிருந்தும், அதுபோன்று நுரை உண்டாகின்றது. இவ்வாறே சத்தியத்தையும், அசத்தியத்தையும் அல்லாஹ்  உதாரணமாகக் கூறுகின்றான். எனவே (அழுக்கு) நுரையோ வீணாகிப் போய்விடுகிறது. (ஆனால்) மனிதர்களுக்கு பலன் அளிக்கக்கூடியதோ பூமியில் தங்கிவிடுகிறது. இவ்வாறே (நிராகரிப்போரை அழுக்கு நுரைக்கும், விசுவாசிகளைப் பூமியில் பயன் தரும் பொருட்களுக்கும் ஒப்பிட்டு) அல்லாஹ் உவமைகளை விவரிக்கின்றான் ( 13:17)









2012/08/12

திருமறை



"மேலும் உங்கள் வீடுகளில் ஓதப்படுகின்ற அல்லாஹ்வின் வசனங்களையும், ஹிக்மத் ( எனும் சுன்னத்தை ) தையும் நினைவுகூறுங்கள்.( அவற்றின் மூலம் உபதேசம் அடையுங்கள் ) நிச்சயமாக அல்லாஹ் நுட்பமானவனாக                       

( யாவையும் )  நன்கறிந்தோனாக இருக்கின்றான்"  (33:34)


"நிச்சயமாக  அல்லாஹ்வுடைய  வசனங்களை விசுவாசிக்கவில்லையே  அத்தகையோர்  அவர்களை , அல்லாஹ்  நேர்வழியில்  செலுத்த  மாட்டான்.  அவர்களுக்கு  துன்புறுத்தும்  வேதனையுண்டு  "      (16:104)


" இன்னும் விசுவாசங்  கொண்டு  நற்காரியங்களையும்  செய்கின்றார்களோ ,  அத்தகையோர்  அவர்கள்  சுவனவாசிகள், அதில்  அவர்கள்  நிரந்தரமாக (த்தங்கி ) இருப்பார்கள் "                                                          (2:82)


" நிச்சயமாக  அல்லாஹ்வுடைய  வசனங்களை  விசுவாசிக்கவில்லையே  அத்தகையோர்  அவர்களை  அல்லாஹ்  நேர்வழியில்  செலுத்த மாட்டான் , அவர்களுக்கு  துன்புறுத்தும்  வேதனையுண்டு "          (16 : 104)



" உங்களிடமுள்ளவை ( யாவும் ) தீர்ந்து  விடும் , அல்லாஹ்விடம் உள்ளதோ நிலைத்திருக்கும், பொறுமையைக்  கடைப்பிடித்தோர்க்கு  அவர்களுடைய கூலியை  அவர்கள்  செய்து  கொண்டிருந்தவற்றில்  மிக  அழகானதைக்  கொண்டு  திண்ணமாக  நாம்  வழங்குவோம்  "               (16 : 96) 



" ( மனிதர்களே ) நீங்கள்  வறுமைக்குப் பயந்து  , உங்கள்  குழந்தைகளைக்  கொலை  செய்யாதீர்கள்.  அவர்களுக்கும் ,  உங்களுக்கும்  நாமே  உண​வை
( வாழ்க்கைத்  தேவைகளை  )  வழங்குகின்றோம். நிச்சயமாக  அவர்களைக் கொலை  செய்வது  பெரும்  குற்றமாக  இருக்கின்றது "  (17 :31 )


" விசுவாசங் கொண்டோரே ,உங்கள்  வீடுகள் அல்லாத (வேறு) 
வீடுகளில்  (நீங்கள் நுழைய அவசியம் ஏற்பட்டால், அவ் வீடுகளில்  உள்ளவர்களிடம் ) நீங்கள்  (மூன்று  முறை ) அனுமதி  கோரி, அவ்வீடுகளில்  உள்ளோருக்கு  ஸலாம் கூறாதவரை அவற்றில் ) நுழையாதீர்கள் இவ்வாறு நடந்துகொள்வ) துவே  உங்களுக்கு மிகச் சிறந்ததாகும்  நீங்கள் நல்லுபதேசம்  பெறும்  பொருட்டு  ( இது  உங்களுக்குக் கூறப்படுகின்றது "  ( 24 : 27 )


அடுத்த பக்கத்திற்குச் செல்க

திருமறையின் அருள் மொழிகள் சில



இயற்கையின் அற்புதப் படைப்புக்களில் வானமும் பூமியும் அடங்கும். அவற்றிலுள்ள சிருஷ்டிகளைப் பற்றி எம் மனம் ஆராயும் போது வியப்புக்கள் தான் மனதை வளைத்துப் பிடிக்கின்றன. ஆகாயத்திலே தொங்கிக் கொண்டிருக்கும் மிக அதிக எடையுள்ள சூரியனும், சந்திரனும், உடுக்களும், கோள்களும், ஏனைய வான் பொருட்களும் அவற்றின் அமைப்புக்களால் நம்மை வியப்பூட்ட, மறுபுறம் பரந்து நிற்கும் இப் பிரபஞ்சமும் அதனை நிறைத்திருக்கும் உயிரினங்களும், உயிரற்றவைகளும் நம்முள் ஆச்சரியங்களாக மாறுகின்றன.

அல்லாஹ்வின் இச் சிருஷ்டி பற்றி இறக்கப்பட்டுள்ள திருமறை வசனங்களுள் இவையும் சிலவாகும் ...........

"நிச்சயமாக அல்லாஹ்(தான்) வானங்களையும், பூமியையும் உண்மையாக க்கொண்டே படைத்திருக்கின்றான் என்பதை (மனிதனே)நீ பார்க்கவில்லையா! அவன் நாடினால் உங்களைப் போக்கிவிட்டு புதியதொரு படைப்பைக் கொண்டு வந்தும் விடுவான் "        (14:19)


"வானங்களிலும், பூமியிலும் புகழனைத்தும் அவனுக்கே உரியன,இன்னும் முன்னிரவிலும், நடுப்பகலை அடையும் சமயத்திலும் (அல்லாஹ்வைத் துதியுங்கள்)   (30:18) 


"ஆகவே, (விசுவாசிகளே) நீங்கள் மாலைப்பொழுதை அடையும் போதும், காலைப்பொழுதை அடையும் போதும் அல்லாஹ்வைத் துதி செய்து கொண்டிருங்கள்"  (30:17)


--------------------------------------------------------------------------------------

"வானவெளியில் (அல்லாஹ்வின் கட்டளைக்குக்) கட்டுப்பட்டவையாக 

( பறந்து செல்லும் ) பறவைகளை அவர்கள் பார்க்கவில்லையா அல்லாஹ்வைத் தவிர ( வேறொரு வரும் ) அவற்றை தடுத்து நிறுத்தவில்லை நிச்சயமாக விசுவாசங் கொண்ட சமூகத்தார்க்கு இதிலும் பல அத்தாட்சிகள் இருக்கின்றன " (14:79)


"நிச்சயமாக அல்லாஹ்.அவனை வானங்களிலும், பூமியிலும் உள்ளவைகளும் ( தங்கள்) இறக்கைகளை விரித்(துப் பறந்)த வண்ணமாக பறவைகளும் துதி செய்து கொண்டிருக்கின்றன என்பதை ( நபியே! ) நீ காணவில்லையா! 
( இவற்றில் ) ஒவ்வொன்றும் தன் தொழுகையையும் , அவனைத் துதி செய்யும் முறையையும் திட்டமாக அறிந்திருக்கின்றன. மேலும் அல்லாஹ் இவைகள் செய்பவற்றை நன்கறிந்தவன்" (24:41)

---------------------------------------------------------------------------------------

மேலும், மலைகளிலும், மரங்களிலும் அவர்கள் கட்டுபவைகளிலும் நீ கூடுகளை அமைத்துக்கொள்" என்று உமதிரட்சகன் தேனீக்களுக்கு உள்ளுணர்ச்சிகளை உண்டாக்கினான் .  (16:68)


---------------------------------------------------------------------------------------

"பேரீச்சை, திராட்சை (ஆகிய) பழங்களிலிருந்து மதுவையும், அழகான உணவையும் நீங்கள் எடுத்துக்கொள்கின்றீர்கள் , நிச்சயமாக இதிலும் அறிகின்ற கூட்டத்தினருக்கு ஓர் அத்தாட்சி இருக்கின்றது"     (16:68)


------------------------------------------------------------------------------------------

"பின்னர், நீ எல்லா விதமான கனி(யின் மலர்) களிலிருந்தும் உணவருந்த பின்னர், உனதிரட்சகனின் வழிகளில் ( அவை உனக்கு ) எளிதாக்கப்பட்டதாக இருக்கச் செல்"  ( எனவும் உணர்வை உமதிரட்சகன் உண்டாக்கினான் ) 
இதனால்  அதன்  வயிறுகளிலிருந்து  (தேனாகிய)  ஒருபானம் வெளியாகின்றது. அதன் நிறங்கள் மாறுபட்டவையாகும். அதில் மனிதர்களுக்கு  குணப்படுத்தலுண்டு.  நிச்சயமாக,  இதிலும் சிந்திக்கக்கூடிய கூட்டத்தினருக்கு  ஒரு அத்தாட்சி  இருக்கின்றது"  (16:69)







2012/08/11

அல்(f) பாத்திஹா




திருமறை தரும் அருள் வசனங்கள் அல்லாஹ் எனும் அழகிய 
எழுத்துருக்களுடன் இன்றைய பதிவாக  என் வலைப்பூவில் வாசம் தருகின்றன...அல்ஹம்துலில்லாஹ்!

---------------------------------------------------------------------------------
"அளவற்ற அருளாளன்
நிகரற்ற அன்புடையோன்
அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகிறேன்)  "  (1:1)





"அனைத்துப் புகழும் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரியது "(1:2)


"(அவன்) அளவற்ற அருளாளன் மிகக் கிருபையுடையவன் "( 1: 3)



"(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி "( 1:4)



"(எங்கள் இரட்சகா!) உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம் "(1:5)



"நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக! "  ( 1:6)