நம் வாழ்க்கை அற்புதமானது. நம் வாழ்வின் ஒவ்வொரு நகர்வும், இயற்கை அருட்கொடைகளுடன் பிண்ணிப்பினைந்துள்ளது. அவ்வியற்கையழகை, தேவையை நிராகரிப்போர் இப்புவியின் மனிதப் பிறவிகள் எனும் அந்தஸ்தைப் இழந்து விடுகின்றனர்.
ஒவ்வொரு படைப்புக்களும் இறைவனால் படைக்கப்பட்டு , அவற்றுக்கான வாழ்வியல் விதிமுறைகளும் வகுக்கப்பட்டு, இப் பிரபஞ்சத்தின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.அவை உயிருள்ளவை, உயிரற்றவை,சக்தியென பேதப்பட்டவாறே, ஒவ்வொன்றும் தத்தமது இயல்புகளினால் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டுக் காணப்படுகின்றன. ஆனாலும் இவ் வேற்றுமைகளிலும் ஒற்றுமையிருப்பதன் மூலமாக நமது வாழ்விலும் இவை தொடர்புபட்டுள்ளது.
ஆறறிவு படைத்த உயிருள்ள மனிதன் தன் செயல்களினாலேயே தன்சூழலில் வாழும் ஏனைய ஐந்தறிவு கொண்ட மாக்களிலிருந்தும் வேறுபடுகின்றான். அவனாற்றும் செயல்களில் கலந்துள்ள நன்மை, தீமைகளிலிருந்தே மறுமை வாழ்வுக்கான அத்திவாரமும் பலமாக இடப்படுகின்றது. நாம் செய்கின்ற செயல்களுக்கான அடித்தளமாக சத்தியமும், அசத்தியமுள்ளடங்குகின்றன. செயல்களினடிப்படையில் நம்மை இனங்கண்டு, இயற்கையுடன் உவமித்து ஏகவல்ல இறைவன் அருளிய பல திருவசனங்களை அல்குர்ஆன் தன்னகத்தை ஏந்தியுள்ளது. அவற்றுலொன்று -
"வானத்திலிருந்து நீரை அவன் இறக்கினான் பின் ஓடைகள் அளவுக்குத்தக்கவாறு (நீரைக் கொண்டு)ஓடின. பிறகு வெள்ளம் ( நீருக்கு மேல் மிதக்கும்) நுரையை மேலே சுமந்து சென்றது. (இதுபோன்றே) ஆபரணங்களையோ அல்லது சாமான்களையோ செய்வதற்காக நெருப்பில் அவர்கள் (உலோகங்களை) உருக்குவதிலிருந்தும், அதுபோன்று நுரை உண்டாகின்றது. இவ்வாறே சத்தியத்தையும், அசத்தியத்தையும் அல்லாஹ் உதாரணமாகக் கூறுகின்றான். எனவே (அழுக்கு) நுரையோ வீணாகிப் போய்விடுகிறது. (ஆனால்) மனிதர்களுக்கு பலன் அளிக்கக்கூடியதோ பூமியில் தங்கிவிடுகிறது. இவ்வாறே (நிராகரிப்போரை அழுக்கு நுரைக்கும், விசுவாசிகளைப் பூமியில் பயன் தரும் பொருட்களுக்கும் ஒப்பிட்டு) அல்லாஹ் உவமைகளை விவரிக்கின்றான் ( 13:17)
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!