About Me

2020/06/18

சிறகுகள் இல்லாத சருகுகள்

 மரத்தில் மகிழ்ந்து மடியில் தவழ்ந்து/
இறந்தும் உயிர்க்கும் உரமாய் எழுந்து/
விரிந்து கிடக்கும் விருட்சக் குடைகள்/
பரந்த பூமியின் அருட் கொடைகள்/

காற்றின் உரப்பில் பண் ணிசைத்தே/
காட்டு வெளியில் உல்லாசமாய் திரியும்/
வேரறுந்து தரையில் வீழ்கையில்/
பாருக்குள் முகம் புதைக்கும் வலியில்/

வண்ணப் பூக்களை நெஞ்சில் அணைத்து/
மண் ணுயிர்களுக்கே உணவும் தொகுத்த/
பொக்கிஷங்க ளின்று முதுமையின் நிழலாய்/
போக்கிட மின்றி வீழ்ந்தே கிடக்கின்றன/

மரணம் தொட்டால் கரணம் போடும்/
அரவணைக்க இங்கு யாரும் உண்டோ/
பருவம் உடைந்து கோலமும் சிதைந்து/
தத்துவமாய் சிறகுகள் இல்லாத சருகுகள்/

ஜன்ஸி கபூர் 



தொட்டு விடும் ஈரமும் பேரின்பமே

 கொன்றல் கொஞ்சம் தூறல் பிழிய/
தென்றல் சிறகும் மெல்ல வருட/
வண்ணக்குடையும் கையில் சிலிர்த்தே பறக்க/
எண்ணம் மகிழும் தூறல் மழையில்/

கன்னம் உரசும் புன்னகை வாசம்/
சின்ன தேவதை கண்ணோரம் வீசும்/
கொஞ்சிப் பூக்கும் மழையின் நேசம்/
அஞ்சவில்லை தேகம் நனைய நிதம்/

தரையில் இறங்கும் நீர்ச் சிறையில்/
விரும்பிக் கிடத்தல் குழந்தைக் குணமே/
தொல்லை இல்லா பிள்ளை வாழ்வில்/
தொட்டு விடும் ஈரமும்  பேரின்பமே/

ஜன்ஸி கபூர்  

2020/06/17

காத்திடல் நலம்

செய்தி உலகநடப்புக்களின் உருவம் காட்டும்/
பொய் வதந்திகளால் கலக்கமும் வெடிக்கும்/
ஏய்க்கின்ற மனிதர் வீழ்த்திடும் உலகை/
மெய்யுரைத்தே காத்திடல் நம் நலமே/ 

 ஜன்ஸி கபூர் 

உயிரே உருகாதே

இரவுகளும் நீண்டு உடைகின்றன விடியலின்றி
அரவணைக்கும் உறவுகளும் மூழ்கின்றன பிரிவுக்குள்
மரண இம்சையில் மௌனங்கள் உரச
தூறல் வீழாதோ விழிகளும் நனைந்தே

மெழுகாய் உருகி வலியில் வீழ்ந்தே
எழுகின்ற மனமே அழுகின்றாய் சுயநலவாதிகளால்
அழகிய இயற்கையை அக்கினிக்குள் வீழ்த்தும்
பழகிய மாந்தர் பாவிகளாய் முன்னே

உயரத்தி லிருந்தே வீழும் நீர்தான்
பயனாகும் பாருக்கே மின் னொளியாய்
துயரங்கள் துரத்தும் வீழ்ந்தாலே மிதிக்கும்
பயணப் பாதையை மாற்றிடு புன்னகையால்

உணர்வை வருடும் உண்மை அன்பில்
இன்னல் கலைந்தே இதயம் நெகிழும்
வறுமை வசந்தத்தின் தடையல்ல என்றும்
வருவேன் துணையாக உயிரே உருகாதே

ஜன்ஸி கபூர்