அரவணைக்கும் உறவுகளும் மூழ்கின்றன பிரிவுக்குள்
மரண இம்சையில் மௌனங்கள் உரச
தூறல் வீழாதோ விழிகளும் நனைந்தே
மெழுகாய் உருகி வலியில் வீழ்ந்தே
எழுகின்ற மனமே அழுகின்றாய் சுயநலவாதிகளால்
அழகிய இயற்கையை அக்கினிக்குள் வீழ்த்தும்
பழகிய மாந்தர் பாவிகளாய் முன்னே
உயரத்தி லிருந்தே வீழும் நீர்தான்
பயனாகும் பாருக்கே மின் னொளியாய்
துயரங்கள் துரத்தும் வீழ்ந்தாலே மிதிக்கும்
பயணப் பாதையை மாற்றிடு புன்னகையால்
உணர்வை வருடும் உண்மை அன்பில்
இன்னல் கலைந்தே இதயம் நெகிழும்
வறுமை வசந்தத்தின் தடையல்ல என்றும்
வருவேன் துணையாக உயிரே உருகாதே
ஜன்ஸி கபூர்
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!