எத்தனை இரவுகள் எரிமலை வெடித்தன
எரிந்த கனவுகளும் எரிவாயுவில் கசிந்தன
சத்தங்களின் முழக்கங்களே சதியுடன் ஆண்டன
சந்ததிகள் சரிந்தன சகதித்திரையில்
யுத்தம் என்றனர் யுகத்தை அழித்தனர்
நித்தமும் துயரை நினைவோரம் விதைத்தனர்
சத்திய மாந்தர் சடுதியில் மறைந்தனர்
சித்தம் கொன்றனர் சிரிப்பும் தொலைந்தது
அழகான வாழ்வும் அழிந்தேதான் போனது
அகதி என்றனர் அவலம் நிரப்பினர்;
அகில இருப்பிற்குள் அடைக்கலம் தேடியே
அனாதையானோம் சோகம் சுமையாய் தொடருதே
கண்ணோரக் கனவின் கண்ணீர்க்கதை தானே
காயம்பட்ட வடுவாய் காலத்தோடு வாழும்
நிழலாய்த் தொடரும் நினைவுகள் யாவுமே
பழகிய சுவடுகளைப் பக்குவமாய்க் காட்டுமே
ஜன்ஸி கபூர்
குட்டிக் குளம்
எட்டிப் பார்க்கிறது தவளை
வேட்டைப் பாம்பு வெளியே
என்னதான் நடந்ததுவோ ஏனிந்த மாற்றங்களோ
கண்பட்டுப் போனதுவோ நெறியும் பிறழ்ந்ததுவோ
எண்ணங்களில் திட்டமில்லை ஏற்றிவிடத் துணிவுமில்லை
வண்ணக் கனவுகளுமே கானலாய் பூக்குதிங்கே
பெற்ற அறிவும்தான் விலையாகுது வெளிநாட்டில்
கற்ற கல்வியோ சான்றிதழால் எடை கூடுது
தொற்றைப் பரப்புகிறது விஞ்ஞானம் அஞ்சாது
காற்றும் மாசோடு கலந்தே மகிழ்கிறது
''சீ' தனமே மேடை முழக்கம் வெடித்திடும்
சீதனத் திமிரும் சீர்திருத்தம் தானென்றே
வேதனமாய் பூமிக் அளிப்பார் முதிர்கன்னியரை
சாதனைச் சிரிப்போடு பாவங்கள் சுமந்திடுவார்
தெய்வம் வாழ்ந்த மனிதங்களெல்லாம் தன்னலம்
தெறிக்க மாக்களாகி மறைந்தே போகின்றனரே
இப்புவி வாழ்க்கையின் மர்ம முடிச்சுக்களே
அவிழத்து விடுமோ போதிமரத்துப் பறவைகள்
ஜன்ஸி கபூர்
விஞ்ஞானம் விண் நோக்கிப் பாயஅஞ்சாமல் மனிதனோ இயற்கையை வேட்டையுமாடபிரபஞ்ச ரேகையெல்லாம் நுண்கிருமிக் கூடுகள்தஞ்சமாகி வாழுதே மனித தேகங்களில்
கொரோனா பிரகடனப்படுத்தும் தேசங்களில் பீதிஇறுமாப்புடன் எரிகிறது உயிர்களை உறிஞ்சிவெற்றுக் கண்ணறியாத தொற்றுக்களின் விவேகமதைஉற்று நோக்குது விஞ்ஞானம் வியந்தபடி
நாசிக் கண்கள் மூச்சை அறுக்கையில்நாடித்துடிப்பும் உடைந்தே கதறுதே முகத்திரைக்குள் மரணங்கள் உயர்கையில் உணர்விழக்கும் உறவுகளும்உறைந்து போகின்றன மௌனக் குமுறலுக்குள்
ஊரடங்கும் கையுறையும் முகப்புச் செய்திகளாய்ஊரெங்கும் அலைந்தே உரைக்கின்றதே அவலத்தைபாரெங்கும் தீயாகும் தீரா நோய்களைவிரட்டிடத் துடிக்கிறதே எந்தன் மனம் ஜன்ஸி கபூர்