About Me

2020/07/02

மர்ம முடிச்சுக்கள்

என்னதான் நடந்ததுவோ ஏனிந்த மாற்றங்களோ
கண்பட்டுப் போனதுவோ நெறியும் பிறழ்ந்ததுவோ
எண்ணங்களில் திட்டமில்லை ஏற்றிவிடத் துணிவுமில்லை
வண்ணக் கனவுகளுமே கானலாய் பூக்குதிங்கே

பெற்ற அறிவும்தான் விலையாகுது வெளிநாட்டில்
கற்ற கல்வியோ சான்றிதழால் எடை கூடுது
தொற்றைப் பரப்புகிறது விஞ்ஞானம் அஞ்சாது
காற்றும் மாசோடு கலந்தே மகிழ்கிறது

''சீ' தனமே மேடை முழக்கம் வெடித்திடும்
சீதனத் திமிரும் சீர்திருத்தம் தானென்றே
வேதனமாய் பூமிக் அளிப்பார் முதிர்கன்னியரை
சாதனைச் சிரிப்போடு பாவங்கள் சுமந்திடுவார்

தெய்வம் வாழ்ந்த மனிதங்களெல்லாம் தன்னலம்
தெறிக்க மாக்களாகி மறைந்தே போகின்றனரே
இப்புவி வாழ்க்கையின்  மர்ம முடிச்சுக்களே
அவிழத்து விடுமோ போதிமரத்துப் பறவைகள்

ஜன்ஸி கபூர்   

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!