About Me

2020/07/03

நிழல்கள்

எத்தனை இரவுகள் எரிமலை வெடித்தன
எரிந்த கனவுகளும் எரிவாயுவில் கசிந்தன
சத்தங்களின் முழக்கங்களே சதியுடன் ஆண்டன
சந்ததிகள் சரிந்தன சகதித்திரையில்

யுத்தம் என்றனர் யுகத்தை அழித்தனர்
நித்தமும் துயரை நினைவோரம் விதைத்தனர்
சத்திய மாந்தர் சடுதியில் மறைந்தனர்
சித்தம் கொன்றனர் சிரிப்பும் தொலைந்தது

அழகான வாழ்வும் அழிந்தேதான் போனது
அகதி என்றனர் அவலம் நிரப்பினர்;
அகில  இருப்பிற்குள் அடைக்கலம் தேடியே
அனாதையானோம் சோகம் சுமையாய் தொடருதே

கண்ணோரக் கனவின் கண்ணீர்க்கதை தானே
காயம்பட்ட வடுவாய் காலத்தோடு வாழும்
நிழலாய்த் தொடரும் நினைவுகள் யாவுமே
பழகிய சுவடுகளைப் பக்குவமாய்க் காட்டுமே 

ஜன்ஸி கபூர்

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!