விஞ்ஞானம் விண் நோக்கிப் பாய
அஞ்சாமல் மனிதனோ இயற்கையை வேட்டையுமாட
பிரபஞ்ச ரேகையெல்லாம் நுண்கிருமிக் கூடுகள்
தஞ்சமாகி வாழுதே மனித தேகங்களில்
கொரோனா பிரகடனப்படுத்தும் தேசங்களில் பீதி
இறுமாப்புடன் எரிகிறது உயிர்களை உறிஞ்சி
வெற்றுக் கண்ணறியாத தொற்றுக்களின் விவேகமதை
உற்று நோக்குது விஞ்ஞானம் வியந்தபடி
நாசிக் கண்கள் மூச்சை அறுக்கையில்
நாடித்துடிப்பும் உடைந்தே கதறுதே முகத்திரைக்குள்
மரணங்கள் உயர்கையில் உணர்விழக்கும் உறவுகளும்
உறைந்து போகின்றன மௌனக் குமுறலுக்குள்
ஊரடங்கும் கையுறையும் முகப்புச் செய்திகளாய்
ஊரெங்கும் அலைந்தே உரைக்கின்றதே அவலத்தை
பாரெங்கும் தீயாகும் தீரா நோய்களை
விரட்டிடத் துடிக்கிறதே எந்தன் மனம்
ஜன்ஸி கபூர்
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!