About Me

2020/11/23

azka cert

 







--------------------------------------------------------------------------------------------------


வாழ்க தமிழ்
+++++++++++++
வையகம் வாழ்த்துகின்ற வண்ணத் தமிழும்/
வளமது குன்றாமல் வாழ்ந்திடும் பல்லாண்டே/
உளமது மகிழ்ந்திட உணர்விலும் பூத்திடும்/
உன்னத மொழியாம் எம் தமிழே/

மூத்தோர் போற்றிய முத்தமிழ்ச் சந்தத்தில்/
சத்தான இலக்கண யாப்பும் நடையுமே/
எத்திக்கும் ஒலிக்கின்ற செந்தமிழக் குரலினில்/
தித்திக்கின்றதே மனங்களும் திகட்டா அமுதேந்தி/

வேற்று மொழியினில் இல்லாச் சுவையுடன்/
பற்றுகின்ற சொற்களில் படருதே அழகும்/
இலக்கியங்கள் சுமந்த இன்பத் தொனியினில்/
இதயங்கள் மகிழுதே இளைய தமிழால்/

அருந்தமிழ் பருகையில் அகிலமும் வியக்குதே/
அறத்துடன் மொழிகையில் அதிசயிக்குதே தொடர்பாடலும்/
வீரம் சுமக்கையில் வெற்றியின் முரசோடு/
ஒலிக்குதே செவியினில் தாய்த் தமிழே/

அஸ்கா சதாத் - 8.12.2020
----------------------------------------------------------------------


 உலா வரும் நிலா
+++++++++++++++++++
இருளில் படர்கின்ற வெண்ணிலவே/
ஒளிகின்றாய் பகலின் ஒளியினில்/
குவிகின்றாய் உணர்வினில் கவியாக/
புவியின் உறவும் நீதானே/

அஸ்கா சதாத் - 9.12.20
-------------------------------------------------------------------------






2020/11/22

கல்லறையும் கார்த்திகையும் கல்நெஞ்சைக் கரைத்திடுமா

 1.கல்லறையும் கார்த்திகையும் கல்நெஞ்சைக் கரைத்திடுமா

---------------------------------------------------------------------------------------------

உதிரம் துளைத்தே உமிழ்ந்த சன்னங்கள்/

உயிரினை அறுத்தே உயிர்ப்பித்ததோ கண்ணீரினை/

புதைகுழிகளில் வீழ்ந்தே துளிர்க்கும் வீரம்/

வெறும் கதையல்ல வென்றெடுக்கும் சரித்திரம்/


இதயம் சுமந்த இலட்சிய வேட்கையில்/

இன்னுயிர் துறந்தே மீளாத்துயில் கொள்ளும்/

கல்லறைப் பூக்களின் வாசம் கரைத்திடுமோ/

கல்நெஞ்சாகி மனிதம் மறந்த மாக்களை/


விதைத்த கனவுகளைச் சிதைத்த போரால்/

விழுந்த விதைகளும் மீள எழுகையில்/

மயானத்தில் ஒளிரும் கார்த்திகை தீபங்கள்/

இருட்டின் நிழலுக்குள்ளும் விடியலைத் தேடுகின்றனவே/


ஜன்ஸி கபூர் - 22.11.2020

 

2020/11/19

கதியின்றி சகதியில் வாழ்வு

 


கவிதை சாரல் குழு

****--------*******-**----

சமூக விழிப்புணர்வுக் கவிதைப்போட்டி.

சமூக விழிப்புணர்வுக் கவிதைப்போட்டியின் இன்றைய தலைப்பு:

***********

#கதியின்றி_சகதியில்_வாழ்வு

#நெறியாளர்  - #த.#இளங்கோவன்

நடுவர்

********

#கவிஞர்

#ஜன்ஸி_கபூர் அவர்கள்

இவரை பற்றி-

******** ******

இலங்கை யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட இவர்  இலங்கையில் ஏற்பட்ட யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு சொந்த ஊரிலிருந்து அகதியாக இடம்பெயர்ந்து இரண்டு தசாப்தங்களின் பின்னர் மீளவும்  சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். அரச பாடசாலையில் விஞ்ஞான பாட ஆசிரியையாகக் கடமையை தொடங்கியுள்ளார். தற்போது கடந்த ஐந்து வருடங்களாக யாழ்ப்பாணம் கதீஜா மகா வித்தியாலயம் எனும் அரச கல்லூரியில் அதிபராக (கல்லூரி முதல்வர்) பணியாற்றுகின்றார். B.Ed  பட்டதாரியான நான்  முதுகல்விமாணி (M.Ed) பட்டதாரியாக உயர் தொழிற்றகைமை கொண்டுள்ளார். 

சிறு வயதிலிருந்தே ஏற்பட்ட இலக்கிய ஆர்வம் இன்றுவரை தொடர்கின்றது. கவிதைகளையும் சிறுகதைகளையும் முன்பு எமது நாட்டுப் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் எழுதி வந்த இவர் தற்போது இணைய வழியாக குழுமங்களில் எழுதி வருகிறார். 

கவிதாயினி எனும் வலைப்பூவைத் தயாரித்து அதில் தனது கவிதைகளை பதிவிட்டும் வருகிறார். கல்வித் துறையிலும் இலக்கியத் துறையிலும் சில விருதுகளைப் பெற்றுள்ளார்.

   நாள்:

*******

 பதிவிட்ட இந்நேரம் முதல் ....21.11.2020,சனி இரவு 10.மணிவரை கவிதை படைக்கலாம்.

--------------------------------------------------------------------------------

நடைபெற்ற கவிதைப் போட்டியில் எல்லோரும் சிறப்பாக எழுதியிருந்தீர்கள். எனினும் கவிதைப் போட்டிக்கென சில வரையறைகளும், விதிகளும் உண்டு. ஆங்கிலச் சொல் பயன்பாடு, திருத்தம் மேற்கொள்ளாமை, அதிக சொற்கள், ஒரே சொல்லை ஒன்றிற்கு மேற்பட்ட தடவை பாவித்தல், கவித்துவம் குறைந்த தன்மை போன்ற சில காரணங்களால் சில கவிதைகளைத் தெரிவு செய்ய முடியவில்லை. தொடர்ந்து எழுதுங்கள். வெற்றிக்கான வாய்ப்புக்கள் தேடி வரும்.

வெற்றி பெற்றவர்களுக்கும், பங்கு பற்றியவர்களுக்கும், என்னை நடுவராக நியமித்த நிறுவுநர், துணைத்தலைவர் உள்ளிட்ட கவிக் குழுமத்திற்கும் எனது நன்றிகளும், வாழ்த்துகளும்-

********************* 

45 வெற்றியாளர்கள்  

********************* 

 


 


ஊரடங்கால் இழந்ததைப் பெற்றோம்


  எனது பக்க வாதக் கருத்துக்கள்

--------------------------------------------------

அரசாங்க ஊழியர்களின் வேலைகள் பறிபோகவில்லையே. அவர்கள் ஊரடங்கிலும் சம்பளம் பெற்றார்கள். தனியார் துறைகளில் வேலை செய்தோர்கள் எல்லோருக்குமா வேலை பறிபோனது. வேலையிழந்தோர் மாற்றுவழி பற்றி யோசித்தனர். அடுத்தவரிடம் கையேந்தாமல் சுயமாகத் தொழில்களைச் செய்யக் கற்றுக் கொண்டனர் என்பதும் மறுக்க முடியாத உண்மை


குடும்பத்துக்குள் மனம் விட்டுப் பேசிப் பழகினால்தான் அடுத்தவருடனும் இங்கிதமாகப் பழக முடியும் அறையில் ஆடிய பிறகே அம்பலத்தில் ஆடவேண்டும் என்பது பழமொழிதானே சகோ. அயலாருடன் வம்புப் பேச்சுக்கள் குறைந்துள்ளன. குடும்பத்தினரைப் புரிந்து கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்கள் கிடைத்துள்ளன. குடும்பத்தாருடனும் பட்டும் படாமல் பழகிவிட்டு அயலாருடன் சந்தோசமாகப் பழக முடியுமா


விளையாட்டும் தொலைக்காட்சி பார்த்தலும்கூட மனதை அழுத்தத்திலிருந்து நீக்கி சற்று அமைதிப்படுத்துகின்றது. மன ஆரோக்கியத்திற்கு குடும்ப உறவுகளுடன் இணைந்து விளையாடும்போது சுவாரஸியமான மனநிலை உருவாகின்றது. வெளியே திரிந்து வாங்கும் வம்பு இல்லாமல் போகின்றதல்லவா

தனிமையிலே இனிமை கிடைக்குமோ. கிடைக்கும் நேரங்களுக்கேற்ப குடும்பப் பொறுப்புக்களைத் திட்டமிட்டு பகிர்ந்தளித்தால் தனிமை தானாகவே கிடைக்கும் சகோதரி.

நம்மைப் பற்றி மாத்திரம் சிந்திப்பது சுயநலம்தானே. பொதுநலச் சிந்தனையை நமக்குள் வளர்த்து விட்டதால் நம்மைச் சுற்றியுள்ளோரின் வளமான வாழ்விலும் நாம் பங்களிப்புச் செய்கின்றோம் இல்லையா

இப்போதும் அந்த சுதந்திரம் இருக்கின்றது. ஆனால் எல்லா வேலைகளையும் நீங்களாக இழுத்துச் செய்யாமல் ஒவ்வொருவருக்கும் பகிர்ந்து கொடுங்கள். அவரவர்களை அவரவர் எல்லைகளுக்குள் இருக்கும் பயிற்சியை வழங்க இது சிறப்பான நேரம். கணவனோ பிள்ளைகளோ உறவுகளோ ஒருவரின் உரிமை விருப்பு வெறுப்புகளுக்குள் தலையிடாமல் வாழும் பக்குவத்தை நிச்சயம் குடும்பத் தலைவியால் ஏற்படுத்த முடியும். ஏனெனில் குடும்பத் தலைவியும் ஒரு நிர்வாகிதானே.

வீதியில் நடப்பதை விட வீட்டுக்குள் சுற்றிச் சுற்றி நடப்பதும் ஆரோக்கியமே. எல்லாவற்றிற்கும் மனம்தானே காரணம். கிடைக்கும் சூழ்நிலையில் எமது செயற்பாடுகளை முன்னெடுக்கும் மனப்பக்குவம் வந்துவிட்டால் எத்தடையும் ஏற்படாது.

சந்திப்பு என்பது நேரில்தானா இடம்பெற வேண்டும். மொபைலிலும் நேரலைச் சந்திப்புக்களில் ஈடுபடும் நவீய காலத்திலல்லவா வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

பொருளாதாரமயமான குடும்பக் கட்டமைப்பில் வருமானமே பிரதான இடம் வகிக்கின்றது. இதனால் இயந்திரமயமான வாழ்க்கைக்கு முகம் கொடுத்து ஓய்வு என்பதே இல்லாத நிலையில் ஓடிக் கொண்டிருந்தோம். குடும்ப உறவுகள் மனம் விட்டுப் பேச முடியாத நிலை. இந்நிலையைத் தவிர்த்துள்ளது ஊரடங்கு.

வேலை வேலை என வெளியே நடமாடிக் கொண்டிருக்கின்ற ஆண்கள் அரைகுறையாக தமது காலை மதிய உணவுகளை உணவுச்சாலை கடைகளிலேயே பெற்று வந்தனர். ஆனால் இந்த ஊரடங்களில் இரசித்து ருசித்து வீட்டு உணவுகளை உண்ண முடிந்துள்ளது.

வெளியே பொழுதுபோக்கென நேரத்தை விரயமாக்கி அங்கே இங்கே என வீணாகச் சுற்றிய வாலிபர்கள் தமது வீடுகளுக்குள் கட்டுப்படுத்தப்பட்டு வம்புகளில் மாட்டாமல் மீண்டுள்ளதோடு எதிர்காலம் தொடர்பாகவும் தம் வாழ்க்கையின் போக்கு தொடர்பாகவும் சிந்திக்க நீண்ட நேரம் கிடைத்துள்ளது.

நிறைய பேர் தமது சுயதொழில்களை ஆரம்பிக்க இக்காலம் துணையாகியுள்ளது. பிறரிடம் கைநீட்டி சம்பளம் பெற்றவர்கள் தாமே சுயமாகத் தொழில் செய்யும் சிந்தனையை நடைமுறைப்படுத்தியுள்ளனர். வீட்டுத்தோட்டங்களில் உணவுப் பயிர்களை பயிரிட ஆர்வம் செலுத்தியுள்ளதனால் மரக்கறி கொள்வனவு அவசியமில்லை. புதிய காய்கறிகளை சமையலுக்குப் பயன்படுத்த முடிகிறது.

பாடசாலைக் கல்வி தனியார் கல்வி என அலைந்து திரிந்ததில் சுய கற்றலில் ஆர்வமில்லாமல் சோர்ந்திருந்த மாணவர்களுக்கு தாம் கற்றதை சுயமாக பிறரின் தலையீடு இல்லாமல் கற்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.

சில பெண்கள் தமது மகள்களிடம் சமையல் பொறுப்பினை ஒப்படைத்துவிட்டு உறவினர் அயல் நண்பர்கள் வீடுகளுக்குச் சென்று வம்பளப்பார்கள். இதனால் முரண்பாடுகளும் சண்டை சச்சரவுகளும் ஏற்பட வழியேற்படுகின்றது. இந்நிலை தவிர்க்கப்பட்டு போடப்பட்ட வாய்ப்பூட்டுக்கள் மூலம் மனித நலன் மேம்படுத்தப்பட்டுள்ளது

மிக முக்கியமாக ஒவ்வொருவரும் தமது ஆரோக்கியம் தொடர்பாகச் சிந்தித்து சுகாதாரமான பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிப்பதற்கான சூழலும் விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளது.

குடும்ப உறவுகள் மனம் விட்டுப் பேச சந்தர்ப்பங்கள் கிடைத்தமை ஆரோக்கியமான குடும்ப கட்டமைப்பிற்கு வழிகொடுத்துள்ளது.

மொபைலிலும் முகம் பார்த்து பேச முடியும் என்பது உங்களுக்குத் தொரியாதா சகோதரி. தேநீர் குடித்துத்தான் அன்பைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமா என்ன....தொலைவில் உறவுகள் இருக்கும்போது அன்பு வலிமையானது

ஆசிரியரிடம் நேரடியாக் கற்காவிட்டாலும் அவர்களுடன் தொடர்பு கொண்டுதானே கற்கின்றார்கள். கணனி யுகத்தில் வாழ்கின்றோம். வெளிநாடுகளில் இத்தகைய கல்விமுறைகள்தானே வெற்றி பெற்றுள்ளன. நம்மாணவர்கள் பழக்கப்படவில்லை. அதனால்தான் இத்தவிப்பு. வெளிநாட்டுக் கல்வி முறை சார்பான பயிற்சியை ஊரடங்கு வழங்கியுள்ளது.

சுதந்திரமான திரிச்சல் கட்டுப்படுத்தப்பட்டது சிறந்த வாழ்வுக்கான அடித்தளமே

மாற்றம் ஒன்றே மாறதது. எனவே காலத்தின் வேகத்திற்கேற்ப நமது வாழ்க்கை முறையும் மாற்றப்பட வேண்டுமென்பதை கொரோனா ஊரடங்கு விழிப்புணர்வுச் செய்தியாகத் தருகின்றது

அரச பாடசாலையின் தலைமைப் பதவியில் இருக்கின்ற எனக்கு ஓய்வினை இக்கொரோனா பெற்றுத் தந்தது. ஐந்து வருடங்களாக மூட்டை கட்டி வைத்த கவிதைச் சிந்தனையைக் கிளறியெடுத்தேன். இன்றும் எமக்கு பாடசாலை விடுமுறை தரப்பட்டிருப்பதனால் இவ்விவாதத்திலும் கலந்து கொண்டிருக்கின்றேன். இந்த ஊரடங்கு ஓய்வில் நிறைய கவிதைகளை எழுதும் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. பல நல்ல இலக்கிய உள்ளங்களை அடையாளப்படுத்தி உள்ளது ஊரடங்கு. நான் இழந்த கவிதைகளை மீளப் பெற்றுக் கொண்டேன். கூட்டுப்பறவைகள் உள்ளிட்ட கவிக் குழுமங்கள் சிலவற்றில் முகங் காட்டிக் கொண்டிருக்கின்றேன். இலக்கியவாதிகளின் எழுதுகோல் முனையைத் தீட்டியுள்ளது என்பதும் உண்மை.

ஆடம்பரம் அற்ற திருமண நிகழ்வில் கலகலப்பு இல்லையா சகோ. கடன்பட்டு செலவளித்து விட்டு திண்டாடுவதை விட நிம்மதியுடன் சிக்கனமாக வாழ்வதே சிறப்பு மீனா கோபி சகோ

வேறு வழியில்லை. நம்மைப் பார்ப்பதற்கு வீட்டு பீரோ கண்ணாடியாவது இருக்கின்றதே. நமது திருப்தியே மிகப் பெரிய சக்தி. மனநிலை கொஞ்சம் மாற்றப்பட வேண்டும். மீனா கோபி சகோ

இந்த ஊரடங்கு காலத்தில் கொரோனா தவிர்ப்பு நடவடிக்கைகளுக்கென்றே நீளும் செலவினை ஓரளவாவது தவிர்ப்பதற்காக எரிபொருள் விலையேற்றம் இருக்குமல்லவா. மலிவாக கிடைத்தால் தற்கு மதிப்பு இருக்காது

மீனா கோபி ஓய்வின்றி உழைத்த ஆட்டோ உள்ளிட்ட சாரதிகள் பலரின் பணம் சாராயக் கடைகளுக்குச் செல்வதை தாங்களும் அறிவீர்கள். உழைக்காத போது வீண் செலவுகள் கட்டுப்படுத்தப்பட்டு ஓய்வாக தங்கள் குடும்பத்துடன் காலம் கழித்தார்கள்.

மீனா கோபி எந்தவொரு செயலும் விருப்பத்துடன் செய்தால் அலுக்காது

எண்ணெய் நிறுவனங்கள் உள்ள நாடுகளிலும் கொரோனா அசாதாரண நிலைதானே. பாம்பின் கால் பாம்பறியுமல்லவா

மீனா கோபி நீங்கள் சொன்ன வர்க்கத்தினர் இந்த ஏழ்மையிலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். வாழ்க்கையைக் கற்றுக் கொள்ள கொரோனா வழியமைத்துக் கொடுத்துள்ளது என்றுதான் நாங்கள் சொல்கின்றோம்.

மனிதாபிமான உதவிகள் மூலம் ஏழைகள் முன்னரை விட அதிகமாக பசியாற்றுகின்றார்கள் என்பதை எதிரணியினர் மறந்து விட்டார்கள்போல்

மனிதாபிமான நிறுவன உதவிகள் மூலம் சில ஏழைகளின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது.

மீனா கோபி தனித்தன்மை இழப்பு ஊரடங்கு காலத்தில் மட்டுமா இருந்தது. இழந்தது மீளக் கிடைத்துள்ளது

 மீனா கோபி - அமைதிஇ மௌனம் தனக்குள் கற்றுக் கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டும். மீன்பிடிக்க வேண்டும் எனும் சிந்தனை ஊரடங்கு காலத்தில் ஏற்படுத்தப்படுகிறது. ஒரு செயலைப் பழக்க முதலில் வேண்டும் சிந்தனைதானே சகோ.

குழந்தைகள் விளையாடினார்கள் தானே வீட்டுக்குள்ளே அதுவும் வித்தியாசமான அனுபவம்தானே. உறவுகளுடன் நேரம் செலவிடல்.

 

ஜன்ஸி கபூர்

#ஊரடங்கால்_இழந்ததைப்_பெற்றோம்

--------------------------------------------------

---குடும்பத்தின் அன்பும் நெருக்கமும் புரிந்துணர்வும்

---சுவையான சாப்பாடு. சமையற்கலை மேம்பாடு. ஆண்களும் சமைக்கக் கற்றுக் கொள்ளல்

---பெண்களின் வேலைச் சுமையை அருகிருந்து ஆண்கள் கண்டு கொள்ளும் வாய்ப்பு

----சுய சுத்தம் பற்றிய விழிப்புணர்வு

----மனிதாபிமான உதவிகள் வழங்கல்.

----பொருளாதாரம் தடைப்பட்டபோது சுயதொழில் பற்றிய சிந்தனை. சுயதொழில்களில் ஈடுபடல்

----வீட்டுத் தோட்டம் அமைத்தல்

----குடும்ப உறுப்பினர் ஒன்றிணைந்து பொழுதுபோக்குகளில் ஈடுபடல்.

----சேமிப்பின் முக்கியத்துவம் உணரல்

----ஓவ்வொருவரும் தமது பாதுகாப்பில் கரிசனை

----ஆன்லைன் முறையிலான நவீன கல்வித் திட்டத்திற்குப் பயிற்றப்படல்

----பிச்சைக்காரர்கள் நடமாட்டம் குறைவு

----பிறருடனான வீண் முரண்பாடுகள் தவிர்ப்பு

---கை வைத்தியத்தின் பால் கரிசனை

---ஆடம்பர நிகழ்வுகள் தவிர்க்கப்பட்டன.

---இலக்கியத் துறையில் ஈடுபட சந்தர்ப்பம்

---அரச துறையினருக்கு சற்று ஓய்வும் வீட்டாருடன் இணைந்திருக்கும் சந்தர்ப்பம்.

----நிலையற்ற வாழ்க்கை பற்றிய உண்மைத் தன்மையை விளங்கிக் கொள்ளல்.

----அநாவசியமான பிரயாணங்கள் தவிர்ப்பும் கட்டுப்படுத்தலும்

----சுகாதாரமான முறையில் உணவு உட்கொள்ளப் பழகல்

----தேவையற்ற விதத்தில் பொருட் கொள்வனவு செய்வதைத் தவிர்த்தல்

----சிறந்த குடிமகனாக அரசின் சட்டத்திற்கு கட்டுப்படும் தன்மை

இவ்வாறாக இன்னும் பல விடயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்


இறுதி வாதம்

எப்படியும் வாழலாம் என்று சுதந்திரமாகத் திரிந்தவர்களை இப்படித்தான் வாழ வேண்டுமென்ற வாழ்க்கைமுறையைக் கற்றுக் கொடுத்ததுடன் தனது குடும்பம் பற்றியும் தன்னைப் பற்றியும் ஆழமாக சிந்திப்பதற்கான வாய்ப்பும் கிடைத்ததுடன் தனது ஆரோக்கியமான வாழ்வுக்கான சுகாதாரமான நடைமுறைகளையும் மேற்கொள்ளும் வாய்ப்பையும் ஊரடங்கு காலம் வழங்கியுள்ளது. புதிய வாழ்வுக்குள் நுழைவதற்கான இடித்தளத்தையும் இது வழங்கியுள்ளது. இயந்திரமயமான வாழ்வுக்குள் மூழ்கி தொலைத்த பலவற்றை மீளப் பெற்றுக் கொடுத்துள்ளது. ஒவ்வொன்றையும் பெறும்போதும் கற்றுக் கொள்ளும்போதும் சில இழப்புக்கள் தவிர்க்க முடியாதவை.

 --------------------------------------------------------------------------------------------------

Osly Caffoor

"இழந்ததைப் பெற்றோம்"

அன்று ருசியான,விதவிதமான அருஞ்சுவை உணவுகளை ருசித்திட வேண்டுமென்றால் ஹோட்டலுக்கும்,ரெஸ்டுரான்டுக்கும்தானே ஓடி ஓடி உண்டி பெருக்க உண்டு வந்தோம்..அதன் பின் விளைவுகளை உணராமல்!

ஆனால் வீட்டுச்சாப்பாடுதான் கதி என்று ஆன போது அதனை ருசிக்க,மணக்க ,விதவிதமாக சமைக்கக் கற்றுக் கொண்டோம் .உடல் நலனையும் ,நா ருசியையும் கருத்திற் கொண்டு சமையலும் ஒரு கலைதான் என்பதை உணர வைத்தது இந்த ஊரடங்குக் காலம் !

 

"இழந்ததைப் பெற்றோம்"

அன்று வீட்டில் ஒருவருக்குக் காய்ச்சலா..தலைவலியா..உடல் வலியா..போ டாக்டரிடம் !இப்படித்தானே எடுத்ததெற்கெல்லாம் ஓடினோம் நவீன மருத்துவத்திற்கு ! 3 நாட்களில் சுகம் தந்து மீண்டும் 30 நாட்களில் மீண்டு வரும் அந் நோய்களைப் பற்றி உணராமலேயே ! ஆனால் ஊரடங்குக் காலத்தில் அப்படி ஓட முடியாத நிலை . 'கை வைத்தியம் ,வீட்டு வைத்தியம் என்று "இயற்கை வைத்தியங்களையும் " கற்றுக் கொண்டோம் இக் காலத்தில் . பக்க விளைவுகளற்ற இயற்கை வைத்தியம் உடலுக்கு ஒத்துப் போவதுடன் ஆரோக்கியமாகவும் வாழ வைக்கும் என்பதையும் உணர்ந்து கொண்டோம் !! 

Osly Caffoor

பணத்தை நோக்காகக் கொண்டு இயந்திரமாக இயங்கிக் கொண்டிருந்த நாம் நமது வயோதிப காலத்தில் வீட்டில் முடங்கினால் எப்படி இருக்கும் என்ற அச்ச உணர்வை உணர வைத்தது இந்த ஊரடங்குக் காலம் !

அந்த வயோதிபத்தில் எம்மை அரவணைப்பது பணம் அல்ல ! நாம் சேமித்து வைக்கும் அன்புள்ளங்களும் ,உறவுகளுமே !இதை உணர்த்தியது இந்த ஊரடங்குக் காலம் !!