About Me

2021/04/13

இருமுகம்

 

அகமும் புறமுமென
அலைகின்ற முகத்தினில்/
அதிரும் உணர்வுகள்
அணைக்குதே வாழ்வினில்/

உதட்டுப் புன்னகைக்குள்
உறைகின்றதே வன்மமும்/
உள்ளத்தின் சோகம்
உறவுக்குள் பூவாகின்றதே/

மெய்க்குள் மூழ்கும்
பொய்களை மறைத்தே/
சாய்வார் வேலிபோல்
சாய்த்திடுவார் வேட்டையினில்/

சீற்றத்தை மறைத்தே
சிரிப்பார் அன்புபோல்/
தோற்றமும் மறைத்தே
ஏற்றிடுவார் மறுமுகத்தை/

ஜன்ஸி கபூர்- 22.11.2020

பாதை வழியே

  

விதியின் வழியே 
படர்கின்ற பயணத்தில்/
விரிகின்றதே வாழ்வும் 
வியக்கின்றதே மனதும்/

கற்களும் முட்களும் 
காயங்களின் வலிகளும்/
பூக்களின் ஓசைக்குள் 
சப்தமிடுகின்றன மெலிதாக/
 
நகர்கின்ற தரிசனங்களில் 
பதிகின்ற சவால்கள்/
சிகரமென உயர்ந்தே 
சிந்தையதைத் துளைக்கையில்/

வருத்தத்துள் வீழ்ந்திடாமல் 
வலிமையோடு வென்றிட/
முயற்சியின் எழுச்சிக்குள் 
எழுகின்றேன் தன்னம்பிக்கையுடன்/

ஜன்ஸி கபூர் - 17.11.2020
-------------------------------------------------------------------------------- 

பாதை வழியே
---------------------------
பாதை வழியே நடக்கின்றேன் இதமாக/
பரவசத்தில் மனமும் பற்றுதே தரிசனங்களில்/

வீழ்கின்ற அருவி வெண்நுரை தூவி/
தென்றலில் கரைகையில் களிக்குதே மனமும்/

பச்சை விரிப்பில் பதுங்கும் புற்களில்/
இச்சையோடு முத்தமிடுகின்றன வெண்பனித் துளிகள்/

நீள்கின்ற பயணம் இரசிக்கின்றேன் ஒவ்வொன்றாய்/
மாறுகின்ற காட்சிபோல் வாழ்க்கையும் நிலையற்றதே/

அஸ்கா சதாத்  - 17.11.2020

 








 

 

நீயும் நானும்


அள்ளிச் செருகிய ஆசைகளோ விழிகளுக்குள்/
அன்பின் தித்திப்புக்குள் அடங்கினோம் சுகமாக/

அலைகளின் அணைப்புக்குள் தித்திக்கின்றதே காதலும்/
அன்பே சாய்கின்றேன் உன் மடியினில்/

மெலிதான பூங்காற்றாகி மேனி தழுவுகையில்/
அந்திச்சிவப்பும் மறைகின்றதே உன் வெட்கத்துக்குள்/

 ஜன்ஸி கபூர் - 19.11.2020

ஏதோ நினைவுகள்

 


உதிர்கின்ற ஒவ்வொரு நாட்களிலும் வீழுகின்றதே/

உணர்வுகளுடன் கலந்துவிட்ட இனிய நினைவுகள்/

பள்ளி நாட்களைப் பகிர்ந்த தோழமைகள்/
உள்ளத்தின் சேமிப்பினில் சுகமான சுவடுகள்தானே/

கண்ணீர் ஈரத்தினை ஒற்றியெடுக்கின்ற அன்பும்/
அடங்கிக் கிடந்த தருணங்களும் அழகானவை/

மனதைச் சுவைக்கின்ற ஒவ்வொரு நினைவுகளையும்/
தனிமைக்குள் திறந்தே உயிர்க்கின்றேன் தினமும்/

அஸ்கா சதாத் - 14.11.2020