About Me

2021/04/22

கூடை மேல கூடை வைச்சு



கூடை மேல கூடை வைச்சு/
ஓடையோரம் அசைந்து போற புள்ளே/
கடைக்கண் பார்வைக்குள்ள என்ன சிக்கவச்சு/
நடக்கிறீயே வாடையாத் தழுவுறேன்டி நானே/

காலில கட்டின ஒன்னோட கொலுசு/
காதோரம் சிணுங்குதடி காதலச் சொல்லுதடி/
காத்திருக்கும் நேரமெல்லாம் அனலும் வீசுதடி/
கனிந்த மனசுக்குள்ள நெனப்பும் தழுவுதடி/
 
நெற்றியில முத்துக்கள் வெளஞ்சிருக்கு புள்ள/
நெஞ்சுக்குள்ள முத்தத்தோட ஈரம் செவந்திருக்கே/
நெசத்தில நாம சேர்ந்திருக்கும் காலம்/
நெருங்கியே வரணுமே  நேசப் பைங்கிளியே/

ஜன்ஸி கபூர்   

தாயும் கன்றும்

 கட்டிய கயிற்றை அவிழ்த்தே கன்றும்

ஒட்டியும் உறவாடி ஒன்றுக்கொன்று மகிழுதே 

முட்டியே மோதி முற்றத்தில் விளையாடுகையில்/

கிட்டிடும் அன்பினை கண்களால் ரசித்திட/

எட்டிடும் தூரத்திலே தாயது இல்லையே/ 


ஜன்ஸி கபூர்  

காரைக்கால் அம்மையார்

தனதத்தன் மகளாக தரித்தாரே காரைக்காலில்/

தரணியும் புகழ்ந்திட தந்தாரே திருவந்தாதி/

புனிதவதி இயற்பெயராம் புகழானார் அம்மையாராக/

புனிதமான தெய்வமுமாகி புகுந்தாரே மனங்களில்/


சிறுவயது சிவபக்தையின் சிந்தைக்குள் சிவநாமம்/

சிவபெருமான் சிறப்புக்களை சிறப்பாக யாத்தாரே/

இசைத்தமிழின் அன்னை இசைத்தாரே பனுவல்களை/

இறைவனைப் பாடியே இணைந்தாரே திருப்பதிகத்துள்/


கயிலை மலைதனை கைகளினாலே நடந்தே/

கண்ணியமும் பெற்றார் களித்தாரே சிவனும்/

மாங்கனித் திருவிழா மாண்பாக்கும் அம்மையாரை/

மக்களும் தொழுதே மனநிறைவும் பெற்றிடுவார்/


திருக்கோயில் சிற்பங்களில்  திருமேனியைப் பதித்திட்டார்/

திருவடியின் கீழ்ப்பேற்றை திருவருளாகப் பெற்றிட்டார்/

திருவாலங் காட்டில் விதைக்கப்பட்டே உரமானார்/

திருவுருவம் கொண்டே சிறக்கின்றார் வரலாறுகளில்/

கல்வியே சிறப்பு


ல்வி கற்கையில் எதிர்காலம் பலமே/
ந்ததி தோறும் ஆரோக்கிய சுகமே/
பட்ங்கள் பதவிகள் நமது அடையாளம்/
ரணியும் வாழ்த்துமே நமது புகழை/  
ணிவுடன் சேரும் அறிவே அழகு/
ஆற்லும் வளர்த்தே வாழ்வினில் சிறப்போம்/

ஜன்ஸி கபூர்