About Me

2020/08/10

அன்பே என்னுயிரே

 அமுதூட்டும் விழியாளே/

ஆரத்தழுவினேன் உனையே

ஆனந்தம் வழிந்தோட/

இளமைச் சிற்பமே

இன்பவூற்றின் செங்கரும்பே/

ஈகையாய் எனக்களித்தாய்

உனைத்தானே  எழிலே/

ஜன்ஸி கபூர் - 02.08.2020



    •  
  •   

முப்பொழுதும் உன் கற்பனைகள்

விழி நீண்டிடும் கனவுக்குள்ளும்  சிலிர்ப்பலைகள்

விழுந்திட்டதே உன் அன்பின் சுவையால்

தழுவிடும் முந்தன் கரங்களின் சுகத்தினில்

நழுவிடும் மின்னலும் மென்னுடல் பிணைகிறதே


தாமரைச் சாற்றினிலே ஊற்றெடுத்த உடம்பும்

தந்தியடிக்குதே உன்னைக் கண்டதும் அன்பாலே

பேச்சிலும் மூச்சிலும் நீயே நானாகி

பேரானந்தமாய் வாழ்ந்திடலாம்  பல நாழியே


உந்தன் குறும்பைப் பிழிந்தூற்றும் உதட்டுக்குள்

உறவாகும் எந்தன் பெயரும் தித்திக்கும்

உன் இரேகைக்குள் பிணைந்திட்ட என்னாசைகள்

கண் வழியாய் காதலுடன் உறவுமாகும்


தேன் நிரப்பி நெய்திட்ட மேனிக்குள்

தேங்கிடுதே இன்பங்கள் தினமுனை வாசிக்க

காணும் திசையெல்லாம் படர்ந்தாய் நிழலாய்

வாழுகிறேன் நானே எனை மறந்தே

மனசுக்குள்ளும் முப்பொழுதும் உன் கற்பனைகள் 

 

ஜன்ஸி கபூர்

2020/08/09

மழையில் பூத்த நிலா

தெறித்திட்ட பூமழையில் நனைந்திட்ட நிலவும்

பறித்தெடுத்த இலைக்குள் மறைக்கின்றதே உடலை

சிரித்திடும் கன்னமதில் விரிந்திடும் அழகும்

பூரிக்கின்றதே சிற்பமவள் மெல்லிடையும் சிலிர்க்க


மூடிய விழிகளுக்குள் மோதிடும் மகிழ்வெல்லாம்

சூடிய மல்லிகையின் வாசத்தில்  நுரைத்தெழ

நனைந்திட்ட தேகமதும் விரித்திடும் சிறகால்

புனைந்திட்ட காவியமாய்  உயிர்த்திடுவாள் இவளே


ஜன்ஸி கபூர்

யாழ்ப்பாணம்  


  •  

வறட்சிப் பூக்கள்

ஏக்கங்கள் வெடித்திடும் ஏழ்மையும் கண்டே/

ஏனி றங்கவில்லை வான்மழையு மிங்கே/

வெடித்திட்ட தரைக்குள்ளே துடித்திடும் வலியும்/

வடித்திட்ட கண்ணீரும் ஈரமில்லா அனலே/


வறட்சி நிலமெல்லாம் கரைந்திட்ட பசுமையால்/

வயிறும் காய்ந்ததே வைரமாய் இடரிங்கே/

வசந்தத்தின் நிழலிங்கே பெருஞ்சுமைக்குள் இளைப்பாற/

வாடிய மனங்களின் தேடலிங்கே மூச்சறுப்பே/


ஜன்ஸி கபூர்