விழி நீண்டிடும் கனவுக்குள்ளும் சிலிர்ப்பலைகள்
விழுந்திட்டதே உன் அன்பின் சுவையால்
தழுவிடும் முந்தன் கரங்களின் சுகத்தினில்
நழுவிடும் மின்னலும் மென்னுடல் பிணைகிறதே
தாமரைச் சாற்றினிலே ஊற்றெடுத்த உடம்பும்
தந்தியடிக்குதே உன்னைக் கண்டதும் அன்பாலே
பேச்சிலும் மூச்சிலும் நீயே நானாகி
பேரானந்தமாய் வாழ்ந்திடலாம் பல நாழியே
உந்தன் குறும்பைப் பிழிந்தூற்றும் உதட்டுக்குள்
உறவாகும் எந்தன் பெயரும் தித்திக்கும்
உன் இரேகைக்குள் பிணைந்திட்ட என்னாசைகள்
கண் வழியாய் காதலுடன் உறவுமாகும்
தேன் நிரப்பி நெய்திட்ட மேனிக்குள்
தேங்கிடுதே இன்பங்கள் தினமுனை வாசிக்க
காணும் திசையெல்லாம் படர்ந்தாய் நிழலாய்
வாழுகிறேன் நானே எனை மறந்தே
மனசுக்குள்ளும் முப்பொழுதும் உன் கற்பனைகள்
ஜன்ஸி கபூர்
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!