About Me

2020/08/15

ஆள்கிற சுதந்திரம் அடைந்தோமே

 போராடிப் பெற்றோம் பேரின்பம் கிட்ட/

பாராட்டும் மனிதமே பாரினில் நம்மை/

முதலாளித்துவம் விரட்டி முன்னேற்றம் கண்டோம்/

மதங்கள் கடந்தும் மாண்புடன் வாழ்கிறோம்/

அகிம்சை வழியிலான அறமோங்க/

அகிலத்தில்  வாழ்ந்திடலாம் அன்பின் துணையுடனே/


ஜன்ஸி கபூர் 


 

சிகண்டி

ஆண் அவசரத்தால் பெண் அவலம்/

அரங்கேறிய மகாபாரத்தின் மாந்தராய் சிகாண்டினி/

முற்பிறப்பில் காசி மகள் அம்பாவாம்/

சுகமிழக்கிறாள் பீஷ்மரால் மணமேடை காணாமலே/


மறுபிறப்பெடுத்தாள் பாஞ்சால வம்சத்து சிகண்டினியாய்/

மலைத்திடும் வீர மகனாய் வளர்க்கப்பட்டாள்/

வெஞ்சினத்துள் பீஷ்மரை வீழ்த்தியே நின்றாள்/

அஞ்சிடாத பாண்டவர் அணிக்கும்  துணையுமானாள்/


பெண்மகள் ஆணுருவில் மணந்தாள் மாதை/

பொருத்தமில்லாத உறவெனவே பிரிந்திட்டாள் மனையாள்/

வருந்திய மனதுடன் இறந்திடத் துடிக்கையில்/

வாழ்க்கையும் மாறியதுவே ஆணாகவே மீண்டாள்/


திரும்பினான் சிகாண்டியாய் இல்லறத்திலும் இணைந்தான்/

விரும்பிய வாழ்வுக்குள்ளே சந்ததிகளும் கண்டான்/

குருசேத்திரப் போரும் நீண்டது பகைமையினில்/

எதிர்த் துருவங்களில் சிகாண்டியும் பீஷ்மரும்/  


உரைத்திட்டான் சிகாண்டியும் பலியை நினைவுறுத்தி/

உணர்ந்திட்டார் பீஷ்மரும் இழுக்கே போரிடுதலென/ 

உருமாற்ற இரகஸியம்தனை அறிந்த அருச்சுனனும்/  

சிகண்டியை முன்னிருத்தி பீஷ்மரையும் வீழ்த்தினானே/


ஜன்ஸி கபூர் - 13.08.2020



விடுதலை

 சுதந்திரக் காற்றே சுவாசத்துள் நீ/

சுற்றங்களின் அணைவில் மணக்கிறதே விடுதலையும்/

சுதந்திர உணர்வின் விருட்சத்தில் நாடும்/

சுபீட்சமாக வாழ நனையுது அபிவிருத்தியில்/


ஏகாதிபத்திய தலைமையை எதிர்த்திட்ட தியாகமே/

ஏந்துகிறதே சுடரினை எதிர்காலமே ஒளியில்/

இதயங்கள் வருந்திட சிறைக்குள்ளும் பூத்தனர்/

இன்னல்கள் விளைந்திட பெற்றோமே உரிமைகள்/


உதிரங்கள் ஊற்றி உயிர்களையும் நட்டி/

உணர்ச்சிகளின் எழுச்சியில் உருவானதே விடுதலை/

பிணக்குகள் மறந்து இன்முகம் அணிந்து/

காத்திடுவோம் நம் வளமான பூமியே/


ஒற்றுமையில் உழைக்கும் உற்சாகக் கனவு/

ஓயாது மலர்கையில் விழிப்புணர்வும் மலருமே/

வெள்ளையரின் கோட்டையை கைப்பிடித்த சாதனையே/

உள்ளத்திலும் ஒலித்திடும் சரித்திரத்திலும் பதிந்துவிடும்/


ஜன்ஸி கபூர் - 05.08.2020


கருப்பு காந்தி

பாரத தேசத்தின் நேசகர் ஆனவர்/

தாரக மந்திரமாக கல்லாமை நீக்கியவர்/

மனிதருள் மாணிக்கம் கனிவின் வித்தகர்/

தனித்திருந்து கடமைகளை கருத்தோடு செய்தவர்/

 

பட்டங்கள் பெறாமலே சட்டங்கள் சொன்னவர்/

திட்டங்கள் தீட்டியே மனங்களை வென்றவர்/

குடும்பமாக தேசமே உயிர்க்கவே   உரமாகியவர்/

தடுமாறும் ஏழைக்கே தாய்மையில் நின்றவர்/


விரிந்த தேசமே விரும்பிட நின்றார்/

விருட்சமாகி கல்விக்குள் சேவைகள் புரிந்தார்/

சமத்துவம் பேணி சார்ந்திட்டார் அன்பில்/

சரித்திர பூமியை சொர்க்கமாகவே மாற்றினார்/


ஜன்ஸி கபூர்