About Me

2020/08/15

சிகண்டி

ஆண் அவசரத்தால் பெண் அவலம்/

அரங்கேறிய மகாபாரத்தின் மாந்தராய் சிகாண்டினி/

முற்பிறப்பில் காசி மகள் அம்பாவாம்/

சுகமிழக்கிறாள் பீஷ்மரால் மணமேடை காணாமலே/


மறுபிறப்பெடுத்தாள் பாஞ்சால வம்சத்து சிகண்டினியாய்/

மலைத்திடும் வீர மகனாய் வளர்க்கப்பட்டாள்/

வெஞ்சினத்துள் பீஷ்மரை வீழ்த்தியே நின்றாள்/

அஞ்சிடாத பாண்டவர் அணிக்கும்  துணையுமானாள்/


பெண்மகள் ஆணுருவில் மணந்தாள் மாதை/

பொருத்தமில்லாத உறவெனவே பிரிந்திட்டாள் மனையாள்/

வருந்திய மனதுடன் இறந்திடத் துடிக்கையில்/

வாழ்க்கையும் மாறியதுவே ஆணாகவே மீண்டாள்/


திரும்பினான் சிகாண்டியாய் இல்லறத்திலும் இணைந்தான்/

விரும்பிய வாழ்வுக்குள்ளே சந்ததிகளும் கண்டான்/

குருசேத்திரப் போரும் நீண்டது பகைமையினில்/

எதிர்த் துருவங்களில் சிகாண்டியும் பீஷ்மரும்/  


உரைத்திட்டான் சிகாண்டியும் பலியை நினைவுறுத்தி/

உணர்ந்திட்டார் பீஷ்மரும் இழுக்கே போரிடுதலென/ 

உருமாற்ற இரகஸியம்தனை அறிந்த அருச்சுனனும்/  

சிகண்டியை முன்னிருத்தி பீஷ்மரையும் வீழ்த்தினானே/


ஜன்ஸி கபூர் - 13.08.2020



No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!