About Me

2020/10/01

அசதிக் கோவை

 

கற்பும் களவும்  இன்பத்தை உரச/

சொற் சுவையினில் களித்திடும் கலித்துறையும்/

கொற்றவனாம் வள்ளல் அசதியினைத் தாங்கியே/

நற்றமிழில் தந்ததே செவியும் இனித்திட/


அமுதம் பிசைந்து கவியூற்றிய ஓளவையின்/

அசதிக் கோவையை சுவைக்கையில் மனமினிக்குமே/

அற்புதக் கவி வார்ப்பின் நயத்தினில்/

அகமும் பருகுமே தமிழ்க்கவியின் புலமையை/


பொன்னுக்கும் புகழுக்கும் இசைகின்ற காலத்தில்/

எண்ணத்தில் சிறந்த வள்ளல் கோமானும்/

தன் கையால்  கூழினைக் கொடுத்தே/

நீக்கினானே ஓளவையின் அசதியையும் அன்பாலே/


அசதியை நீக்கியவனுக்காக அசதிக் கோவையை/

ஆக்கினாரே ஒளவையும் நற்றமிழில் கவியாற்றி/

இரண்டு பாடல்ச் சுவைகளின் இதத்தில்/

இதயமும் நனைகின்றதே பரவசமாய்ப் படர்ந்தே/


முற்றா முகில்மலையெனும் சிற்றிளம் பெண்/

பற்றினாள் உறவாய் பாச மகளுமானாள்/

கொற்றவன் மலைக்கும் சென்றாள் பொழுதொன்றில்/

சீற்றமோ வெம்மைக்கும் பாலைக்குள் அனலே/


கொட்டிய வெம்மையைத் தாங்குமோ கால்களும்

கொடுமைதானே வெயில் வலியும் அவளுக்கே/

முத்தமிழ் வித்தகர்  பிரிவின் வலிதனில்/

முடங்கிடுமோ உள்ளமும் அடங்காத் துயரில்/


கல்லாதோர் வனப்பிழப்பார் சூழ்ந்தோரும் துயருருவார்/

பொல்லாத உலகின் அடையாளமோ பணமும்/

அல்லலுக்குள் சுற்றுமே இளமை மனமும்/

எல்லாத் துன்பத்தின் திரட்சிக்குள் வீழ்வாளோ/


மகளும் என்றே கலக்கத்தில் தாயவளும்/

அசதி மன்னன் ஆளும் மலையின்/

அழகுக் காதலும் இசைகின்றதே வனப்பில்/


கயல்விழிப் பார்வைத்  துடிப்போடு இசைந்த/

காதலன் பார்வைக்குள் காண்பவை அவளே/

காடும் மலையும் பாறைகளும் மரங்களும்/

காதலால் கசிந்தே நினைவுக்குள் வார்க்கின்றதே/


காரிகை எழிலும் காதலன் துடிப்பும்/

கவித்துவத்தில் எழுகின்றதே வனப்பான காவியமாக/


ஜன்ஸி கபூர் - 1.10.2020


 




பூஞ்சோலை

 கவியுலகம் 

கவியுலகம் அணைக்கின்ற கவியுறவுகள் அகத்தினிலே/

களிப்பும் தழுவுகின்றதே கவிகளை வார்க்கையிலே/

சிந்தைக்குள் உணர்வூட்டி சிந்துகின்ற படைப்பினிலே/

வந்தமரும் கற்பனைகளின் மடியிந்தப் பூஞ்சோலை/

 மூன்று சொல் முத்து
 
மல்லிகை தவழும் கூந்தலும் மலரோ/
மொய்க்கின்றனவே வண்டுகள் மகரந்தம் சுவைக்கவே/
புன்னகை சிந்தும் மொட்டும் முத்தோ/
கன்னத்தில் பேரொளி மின்னலாய் பூக்கிறதே/
 
முல்லைச் சிரிப்பினை உதிர்த்திடும் அதரத்தில்/
மூன்றாம் பிறையும் முகத்திரை விலக்க/
தோன்றிடும் கற்பனைச் சுவைதனில் காரிகையும்/
வென்றிடுவாளே நிலாப் பெண் எழிலை/

ரோஜா பிழிந்தே செதுக்கும் சாற்றில்/
நனைகின்றதே தேகமும் சிலிர்ப்பை நுகர்ந்து/
மோகம் சூடும் மயக்கத்தில் மனதோ/
இரசிக்கின்றதே காதல் இம்சையைத் தனக்குள்/



 நடிகர் திலகம்
 
இமயத்தில் திரையுலகை ஏற்றிய செவாலியர்/
இதயத்தில் புன்னகைத்த நடிகர் திலகம்/
கலையையே ஆண்ட நடிப்பின் சக்கரவர்த்தி/
நிழலையும் உயிர்ப்பாக்கிய நவரச நாயகன்/

👄 மயிலானவளே மயங்காதே
 
மயிலானவளே மயங்காதே 
மனசுக்குள்ளே சிரிக்காதே//

சிரிக்கின்ற விழிகளில் 
ஒளிந்திருக்கிறதே நாணமும்//

நாணத்தின் அழகில் 
கன்னங்களும் சிவக்கிறதே//

சிவந்திடும் இதழ்கள் 
எழுதுகின்றதே கவிகள்//

கவிகளை ரசிக்கின்றேன் 
மனமோ உன்னிடமே//

உன்னிடமே எனைக் 
கொடுத்தேன் செல்லமே//

செல்லமே செதுக்குகின்றேன் 
இனிக்கின்றாய் எனக்குள்ளே//

எனக்குள்ளே வரைகின்றேன் 
ஓவியமே உயிர்க்கின்றாய்//

உயிர்க்கின்ற உனையே 
தழுவுகிறேன் சுகமாக//

சுகமான செங்கரும்பே 
எதிர்காலம் இனிக்குமடி//

இனிக்கின்ற நினைவுகள் 
இதயத்தின் மொழியே//

மொழியே தித்திக்கின்றாய் 
ரசிக்கின்றேன் நிதமும்//

 மறந்தால்தானே💗💗💗💗💗💗💗
 
மறந்தால்தானே பிரிவுக்குள் மூழ்கும் உறவும்/
உறவின் அணைப்பே சுகமாகும் வாழ்க்கையில்/

வாழ்விற்கும் அர்த்தமானதே உன்றன் துணையே/
துணையாகித் தொடர்கின்றாய் என்றன் நிழலிலும்/

நிழலும் நிஜமாகுமே பூக்கின்ற மெய்யன்பில்/ 
மெய்யன்பும் தழுவுகின்ற நினைவுகள் அழியாதே/

அழியாத ஓவியமாக உயிர்க்கின்றாய் உயிரினில்/
உயிரினில் படர்கின்றாய் தினமும் நீயே/


    வீரம் 
 
வீரம் பொங்கும் எங்கள் தமிழன்
கரமும் வெல்லும் சூழ்கின்ற போரை
சோரமும் போகாதே சுதந்திர வேட்கை
சரீரத்தையும் விதைக்கின்றோம் வெற்றிக்குள்  தமிழ்மண்ணே

 
 இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு
 
(அதிகாரம்: நீத்தார் பெருமை குறள் எண்: 23)
 
இல்லறத்தில் இசைந்தே தன்னலம் நீக்கி/
இனித்திடும் நல்லறத் தொண்டுதனைப் புரிந்தே/
இன்னுயிர் நீத்தோர் இவ்வுலகின் வழிகாட்டிகளாகி/
இறவா நற்பண்புகளால் பெருமையடைகின்றனர் என்றும்/







 






2020/09/29

அற்புத சரித்திரம்

 

அறிவியல் கண்டெடுத்த அற்புத சரித்திரம்/
அன்பால் ஆண்ட தேசத்தின் மகுடம்/

விழிகளின் கனவால் வாழ்வையே அர்த்தமாக்கியவர்/
விரலிடுக்கால் விஞ்ஞானத்தையே அகிலத்தில் வித்திட்டவர்/

மதம் கடந்த மாண்பான மனிதாபிமானம்/
மகுடம் சூட்டியதே தேசத்தின் சிம்மாசனமாக/

இராமேஸ்வரக் காற்றிலே உருக்கண்ட தேகம்/
இளம் இதயங்களை வருடியதே கனாக்களாக/

அக்கினிச் சிறகினில் உயிர்த்த அழகியல்/
அகிலத்தின் வித்தெனவேப் படர்ந்தது புகழினில்/

அணைந்திடாத தீபமென எரிகின்ற சோதியவர்/
இணையில்லாக் கணிதத்தின் வித்தகர் தானவர்/

ஏவுகணை நாயகனை ஏந்துகின்ற வரலாறு/
மறந்திடுமோ காலங்கள் பல உருண்டாலும்/

ஜன்ஸி கபூர் - 16.10.2020
-------------------------------------------------------

கூட்டுக்குடும்பம் உறவுகளின் பலமே/

கூட்டுமே அனுபவங்களை வாழ்வினில்/

ஜன்ஸி கபூர் - 29.09.20




 









2020/09/28

தாயன்பு

 


உதிரத்தால் நெய்த அன்பின் வருடல்/

உறவாக முகிழ்த்ததே அன்னையின் வடிவில்/

அகிலத்தில் உண்டோ அன்னைக்கு இணையாக/

அரவணைத்தால் கழன்றோடுமே உள்ளத்தின் வலிகள்/  

தன் நிழலினைப் போர்வையாக்கும் பாசத்தில்/

எண்ணமும் நனையுமே மகிழ்வினை ஊற்றியே/


ஜன்ஸி கபூர் - 28.09.20