என் பதிவுகள்சிறு வயது முதல் எந்த சிறு விடயமாயினும் அதனை ஒழுங்குபடுத்தி நேர்த்தியாகச் செய்யும் இயல்புள்ளவள் நான். என் முகநூல் ஓட்டத்திலும் அந்தப் போக்கு தலை காட்டியதால் , எழுத்து வடிவம் பெறும் சிந்தனைகளின் தனித்தன்மை பேண ஒவ்வொரு குறிக்கோள் வகுத்து சில குறுப் களையும், சில பக்கங்களையும் உருவாக்கியுள்ளேன். ஏனெனில் நமது சிந்தனைகள் எழுத்து வடிவம் பெறும் போதே ஆவணப்படுத்தப்படுகின்றது. ஆவணப்படுத்தல் என்பது நம் முயற்சியை , ஆற்றலை பிறர் அங்கீகரிக்கச் செய்யும் ஓர் உபாயமாகும்.


முகநூலில் என் பதிவு-
-------------
Jancy Caffoor


இணைய வலைப்பூ (Blogger)
-------------------------------------
கவிதாயினி

முகநூலில் நான் உருவாக்கியுள்ள Group களும் , அவற்றுக்கான நோக்கங்களும் :-
-------------------------------------------

1. முற்றத்து மல்லிகை-
----------------------------------
அரசியல் மற்றும் தணிக்கைக்குட்படும் விடயங்கள் தவிர்ந்த அறிவுசார், பொழுதுபோக்கு விடயங்கள்


2. நிலாமுற்றம் -
----------------------------- 
அறிவுசார், பொழுதுபோக்கு விடயங்கள்

நலம்
---------
உடல், உள ஆரோக்கிய மற்றும் மருத்துவ தகவல்கள்
4. இனிய கானங்கள்
-----------------------------
புதிய பாடல்கள்

5. சஹானா -
----------------
பழைய பாடல்களுக்காக என்னால் உருவாக்கப்பட்டது


6. அழகிய இஸ்லாம்-
---------------------------------
இஸ்லாமிய மார்க்க விடயப் பரிமாற்றங்களுக்காக உருவாக்கினேன்.
7. வலைப்பூ-
--------------------
இணைய வலைப்பூவில் இடப்படும் பதிவுகளுக்காக மட்டுமே இந்தக் குழு உருவாக்கப்பட்டது.
முகநூலில் என்னால் உருவாக்கப்பட்ட பக்கங்கள்
-----------------------------------------------------------------------


1. கவிஸ்ரீ-
கவிதைகளுக்காக உருவாக்கினேன்.

2. வானவில்-
அவ்வவ்போது மனதில் தோன்றும் பசுமையான எண்ணங்களின் வார்த்தை வரிகள்

3. அநு-
சர்வதேச தினங்கள் தொடர்பான பதிவுகளுக்கான பக்கம்

4. யாழினி-
இலக்கியம் சார்பானவை--- சிறுகதைகள்,கட்டுரைகள் விமர்சனங்களுக்காக உருவாக்கினேன்.

5. தரிசனம் -
அரிய, அழகான புகைப்படங்களுக்காக இப் பக்கம் உருவாக்கினேன்இலக்குகள் வகைப்படுத்தப்பட்டும் கூட , அதற்கு முரணாக இடப்பட்ட பதிவுகளை நான் அவ்வவ்போது நீக்கியுள்ளேன். அதற்குக் காரணம் சம்பந்தப்படவர் மீதுள்ள வெறுப்பல்ல..பதிவுகளின் தனித்தன்மை பேணவே இந் நடைமுறையை மேற்கொண்டேன். சிலர் முரண்பட்டு நட்பை புண்ணாக்கினர். முகநூல் என்னைப் பொறுத்தவரை வெறும் பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்ட கூத்தடிக்கும் இடமல்ல...நல்ல பதிவுகளை ஆவணப்படுத்தும் களம்...

அந்தக் களத்தின் மீதான பயணமே இது.......என் நட்பை ஏற்ற, புரிந்துணர்வுமிக்க நட்புள்ளங்களின் வாழ்த்துடன் இந்தப் பயணம் தொடரும்.முகநூல் எனது நிரந்தர வாசல்தளமல்ல. இருந்தும் எட்டிப் பார்க்கும் நேரங்களில் இதன் தனித்துவத்தைப் பேண இந்தக் குழுக்களும், பக்கங்களும் உதவும் என்ற எதிர்பார்ப்பு நெஞ்சில் முகிழ்க்க .......................

என் பயணம் தொடர்கின்றது !

நான் முகநூலுக்குள் நுழைந்த இந்த பதினெட்டு மாதங்களில் அவ்வவ்போது என் பதிவுகளுக்கு விருப்புகளும், பின்னூட்டங்களும் வழங்கிக் கொண்டிருக்கும் என் நேச நட்புக்களுக்கும் இனிய நன்றி உரித்தாகட்டும்...
No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை