இசையானது மொழிகளையும், மதங்களையும், பேதங்களையும் துறந்து மனித மனங்களை ஈர்க்கக்கூடிய அற்புத உணர்வு. இசைக்கு வரிவடிவம் கொடுப்பது பாடல்களே! பாடல்களுக்கு உருவம் கொடுப்பது காட்சிகள் அல்லது உடலசைவை வெளிப்படுத்தும் நடனங்கள்.
மைக்கல் ஜோசப் ஜாக்சன்........1958 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 ந்திகதி அமெரிக்கா இண்டியானா மாகாணத்திலுள்ள புகழ்பெற்ற இசைக் குடும்பத்தின் வாரிசாகப் பிறந்தார். குடும்பத்தில் ஏழாவது பிள்ளை
ஜாக்ஸனுக்கு செல்லப்பிராணிகள் வளர்ப்பது இஷ்டமான பொழுது போக்காக விளங்கியதால் "பப்புல்ஸ்" எனும் சிம்பன்சியும் , "மிஸ்டர் டிப்ஸ் 'எனும் பனி ஆடும் இவர் தோழமைக்குள்ளான ஐந்தறிவு ஜீவராசிகள். குழந்தைகள் மீது பற்றுள்ளவர். தன் வீட்டில் மிகப் பெரிய தீம் பார்க்கை உருவாக்கி ஆதரவற்ற குழந்தைகளை விளையாடச் செய்தவர்.
ஐந்து வயதிலேயே தனது அண்ணன்மாருடன் இணைந்து "ஜாக்ஸன் பிரதர்ஸ்" இசைக்குழுவில் இணைந்து பாடினார்.
"ஜாக்சன் 5" இசைக்குழுவிலிணைந்து புகழடையும் போது அவரின் வயது 11 ஆகும். இவரது இசைப்பயணம் 1967ல் ஆரம்பமாகி மரணிக்கும் வரை புகழோடிணைந்தே நகர்ந்தது. 1971ல் மேடையேறினார். 1980 ல் பொப் இசையுலகில் தனி முத்திரை பதித்து அமெரிக்கா மக்கள் மனதில் இடம்பிடித்த கறுப்பின இசைக்கலைஞராக முடிசூட்டினார். அவரது நடனம் தனித்துவமிக்கதாகவும், பாடல்கள் இலகுவாகப் புரிந்து கொள்ளக்கூடியதாகவும் இருந்ததால் பலரின் ரசிப்பில் பாடலும், நடனமும் உறைந்து கிடந்தன.
1982ம் ஆண்டு "ஈடி" படத்திற்கான ஒலிக்கோர்வையை தனது குரலில் பதிவு செய்தமைக்காக இவருக்கு கிராமிய விருது கிடைத்தது. அதே ஆண்டில் "த்ரில்லர்" ஆல்பத்திற்காக 8 விருதுகள் கிடைத்தன. அவ் ஆல்பம் உலகளவில் அதிகளவு விற்பனை செய்யப்பட்ட முதல் தர ஆல்பமாக இருந்தது. இவரது நான்கு இசைத் தொகுப்புக்கள் உலக சிறந்த பதிப்புக்களாக முத்திரை குத்தப்பட்டன. இவருக்கு பல "க்ராமி" அவார்டுகளும், கின்னஸ் சாதனைகளும் சொந்தமாகின. "கிங் ஆப் பொப்" பட்டம் ஜாக்சனுக்கு வழங்கப்பட்டது பொருத்தமானதே!
ஜாக்சனின் "ரோபார்ட்", மூன்வாக்" நடன வகைகள் பிரபல்யமானவை. "மூன்வாக்" அவர் கண்ணீர் வாழ்வின் சோகங்களின் பிரதிபலிப்பாகும்.
அவர் இசைத்துறையினதும் நடனத்துறையினதும் தடங்கலற்ற பயணத்திற்காக புவியீர்ப்பு விசையை மீறி இயங்கக் கூடிய பாதணிகளைத் தனக்காகத் தயாரித்து பயன்படுத்தி தேவைக்கேற்ப உடலசைவைப் பேணி பல வகையான நடனங்களஞடன் கூடிய பொப்பிசைப் பாடல்களை வெளிப்படுத்தினார்.
1992ம் ஆண்டு இவரால் பாடப்பட்ட"ஹீல் தி வேர்ல்ட்" எனும் பாடலுக்கு ஐ.நா சபையின் அங்கீகாரம் கிடைத்தது. அவரது "ஏர்த்" பாடல் உலக சுற்றுப்புறத் தினத்தின் அதிகாரபூர்வ பாடலானது. தென் கரோலினா மாநிலத்தின் பாடலும் இவர் குரல் பதிவே!
ஆர்& பி ,டிஸ்கோ, ராக், பொப் என்பன இவரது இசை வகைகளாக பலர் மனங்களைத் தொட்டன.
பாடகராக , நடன அமைப்பாளராக மட்டுமல்ல ஜக்ஸன் எழுத்தாளராகவும், நடிகராகவும் , வணிகராகவும், இசையமைப்பாளராகவும் , சமூக சேவையாளராகவும் தனது திறமையைப் புலப்படுத்தியவர்.
"மேன் ப்ரொம் தி சிங்கிள்" எனும் பாடலை இசைத்து கிடைத்த வருமானத்தை ஆதரவற்றோருக்கு வழங்கியவர். இவர் எயிட்ஸ் நோயாளிகள். ஏழைகளை நேசித்து நிதியுதவி செய்தார்.
இந்த பொப் இசை நாயகனின் மறுபக்கத்தில் பல அவலங்களும் குற்றச்சாட்டுக்களும் பரவிக்கிடந்தன. நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது பெறப்பட்ட தீக்காயங்கள் இவரது உடலின் வடுக்களாகியது. :விட்டிலிகோ" எனும் உடல் நிறமிக்குறைபாட்டாலும் ஆட்பட்டு சிரமப்பட்டார்..
அமெரிக்கா நூலகமொன்றில் பெற்றுக் கொண்ட பல நூல்களைத் திருப்பிக் கொடுக்காது பத்து இலட்சம் டாலர் அபாரதத்தையும் பெற்றுக் கொண்டவரிவர். 1993 ல் குழந்தைகளுடன் தகாத உறவுகளைப் பேணியவர் எனும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதில் பலரின் விரோதத்திற்கும் ஆளானார்.
அவரின் பலகீனம், கட்டுபாடற்ற வாழ்க்கை என்பன அவரை கடனாளியாக்கியது. அந்தக் கடன் சுமையிலிருந்து மீளமுடியாத நிலையில் 2012 ஜூன் 25 ந்திகதி தனது 50 வயதில் லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்காவில் தனது துடிப்புக்களை அடக்கினார். பலரை துள்ள வைத்த இந்தப் பொப் இசை மன்னனின் மறைவு க்கு இன்று மூன்றாண்டு நிறைவஞ்சலி..........நினைவஞ்சலி
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!