About Me

2012/06/30

முத்து !



வாழ்க்கையென்பது மிக நீண்ட பயணம்.............

இப் பயணத்தில் நம்மை நிலைப்படுத்த உறவு, நட்பு, அறிந்தவர் எனும் தரிப்பிடங்கள் நம் வெட்டுமுகங்களாகின்றன. சில நட்புக்கள் காலவோட்டத்தில் கரைந்து போக, சிலவோ ஞாபகப் பரப்பிலிருந்தும் அழியாத உணர்வுப் பதிவாகிக் கிடக்கின்றன.

பாரதம் தந்த பாசக்கிளி. 

"உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே"

இந்தத் தாரக மந்திரத்தால் தன் உள்ளத்தை உரப்பேற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் நல்லிதயம்..............

முத்து .......!


அன்று...


என் முகநூல் ஆரம்பப் பயணத்தில் நண்பராக என்னுள் இறங்கி, இன்று அன்புத் தம்பியாக என் வாழ்க்கைப் பூமியில் நிலையூன்றியிருக்கும் உறவுத் துடுப்பிவர். பெயரில் முத்து இருந்தாலும் அவர் எண்ணங்கள் யாவும் வைரத்தை விட பெறுமதியானவை!

அன்பான உள்ளம் அவருக்கு இறைவன் கொடுத்த அருட்கொடை. நிறையப் படித்தும் கூட துளியளவு கூட கர்வம் கிடையாதவர். நட்புக்கு இன்முகமும் நேசமும் காட்டி மனசுக்குள் மானசீகமாய் பரவிக் கிடப்பவர்.

மதம் மனிதங்களை மலினப்படுத்தும். ஆனால் முத்தோ மதத்தில் "மதம்" கொள்ளாமல், பிற மதத்தவரின் உணர்வுகளைக் கொல்லாமல் தன் மதமாய் பிற மதங்களையும் நேசிக்கும் மானிடப்பண்புள்ள நல்ல இளைஞர்.

பல சோதனை ஆர்ப்பாட்டத்திலும் அமைதி காக்கும் இந்த இளைஞர். தன்னம்பிக்கையுடன் வாழ்வை ஜெயிக்கும் செயல்வீரர்.

என் முகநூலின் பல பக்கங்களின் விடியல் அவர் காலை வணக்கத்துடனேயே விடிந்திருக்கின்றது.

"அக்கா"

மலர்ச்சியில் பல வார்த்தைப்பனித்துளிகள் செய்திகளாய் பரவசப்பட்டுக் கொண்டிருக்கின்றன அவர் விடும் பாசத்தூதாய்!

அவர் முகநூல் பக்கங்களிலும் கூட காலை வணக்கம் வெறுமையாக அல்ல நல்ல படிப்பினையூட்டும் சிந்தனை தாங்கிய செய்தியுடன் கூடிய புகைப்படத்துடனேயே எப்பொழுதும் சிரிக்கின்றன....

முத்து............

கலாரசிகன்......கலைத்திறனில் பிடிப்புள்ள கலைஞன்.....!

அவர் சிந்தனைக்குள் வீழ்ந்து கிடப்பவை உயிர்ப்போட்டமுள்ள புகைப்படங்கள் தான்..அவரது புகைப்பட ஆல்பம்...கருத்துச் செறிவுள்ள சேமிப்பகம்!

 அந்தச் சேமிப்பிலிருந்து சில துளிகள் இப் பக்கத்தை நிறைக்கின்றன பெருமிதத்துடன்........


தான் ரசிக்கும் அழகான , அறிவுபூர்வமான, அற்புதமான, கருத்துச் செறிவுள்ள புகைப்படங்களை ரசிப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல், அப் படம் பேசும் பின்னணியையும் அழகாகப் பதிப்பதில் அவருக்கு நிகர் அவரே!

இவரது புகைப்படங்கள் அழகு, வறுமை, அன்பு, இயற்கை, வாழ்க்கை,பொழுதுபோக்கு என பல வார்ப்புக்களிலும் தெறித்துக் கிடக்கின்றன முகநூல் பக்கங்களில்!

தான் கற்ற படிப்பினை, அறிவுத்துடிப்பாக்கி சாதனைகளின் பக்கம் சாய்ந்திருக்கத் துடிக்கும் இந்தச் சகோதரனின் வெற்றியின் கனம் நாளுக்கு நாள் ஏறுமுகம் காட்டியே நிற்கும் என்பதில் ஐயமில்லை.

நம் வாழ்வின் ஆயுட் பரப்புக்களின் எல்லைக்குள் நாம் சாதிக்கும் சாதனைகளே நம் பெயரை இப் புவியில் பதிக்கவல்லன. அந்த வகையில் முத்தின் நேசத்துக்குள் பொதிந்திருக்கும் பல உறவுகள் அவர் பெயரை அன்போடு வாசித்துக் கொண்டுதானிருக்கின்றன. எப்பொழுதும் வாசித்துக் கொண்டுதானிருக்கும்.

தொடர்பாடலே மனித உணர்வுகள் பகிரப்படும் வாசற்றலம்!


தொடர்பாடலின் போது மனமுரண்பாடுகளும் தாக்குவது இயற்கையே!


அவ்வாறான சந்தர்ப்பங்களில் சகிப்புத்தன்மையுடன், கண்ணீர்க்கசிவின் வெளிப்படுத்துகையை ரகஸியப்படுத்தி உள்ளத்துக்குள் போராடும் போராட்டமும், அதன் சுமையும் நானறிவேன். இருந்தும் அத்தகைய நிலையில் கூட வழுக்களை வெற்றிப்படுத்தும் ஆற்றலை நானும் கண்ணீரில் கரைந்து உணர்ந்திருக்கின்றேன்...

வாழ்க்கை எட்டாத தூரத்தில் விரிந்து கிடந்தாலும் அதனைத் தொட்டுவிடும் மனோபலத்தின் இருக்கை முத்துவிடம் அதிகமாக இருப்பதைக் காணும் போது மனம் மகிழ்வே.......!

இவற்றுக்கும் மேலாக நான் பதிவிடுபவற்றை உடனுக்குடன் ஆதரித்து விருப்புக்களையும், பின்னூட்டங்களையும் தரும் இந்த நேசக்கிளியின் பாசத்திற்கு எல்லை கட்டுவது சாத்தியமற்றதே!

முத்து ..........

உங்கள் வாழ்க்கைப் பயணம் சந்தோஷமாக விடியட்டும் !

என் வாழ்த்துக்களின் புன்னகை உங்கள் மனதை நிறைக்கட்டும்! 

- Ms. Jancy Caffoor -




6 comments:

  1. //தான் கற்ற படிப்பினை , அறிவுத்துடிப்பாக்கி சாதனைகளின் பக்கம் சாய்ந்திருக்கத் துடிக்கும் இந்தச் சகோதரனின் வெற்றியின் கனம் நாளுக்கு நாள் ஏறுமுகம் காட்டியே நிற்கும் என்பதில் ஐயமில்லை.// வாழ்த்துகள் முத்து.....

    ReplyDelete
  2. உதயாவின் வாழ்த்து ....முத்து உங்கள் காதினுள் சுருதியுடன் ஒலிக்கட்டும்.........எப்பொழுதும்!

    நன்றி உதயா !

    ReplyDelete
  3. முத்துவை நானும் நன்கறிவேன். எனதும் பாசத்திற்கும் அன்பிற்கும் உரிய தம்பி. மிகவும் இழகிய மனம் இவருக்கு. இதனைத் தவறாக யாரும் உபயோகிக்கக் கூடாதே என்கிற தவிப்பு எனக்கு. பாசத்தை மழையாகப் பொழிவார். ஜான்சி இங்கே குறிப்பிட்ட யாவும் முத்துவை நன்றாகவே வெளிக்காட்டுகிறது. அவர் எந் நாளும் நலமுடன் இருக்க எல்லாம் வல்ல இறைவன் ஆசீர்வதித்தருள வேண்டுமென வேண்டுகிறேன்..நன்றி ஜான்சி...:)

    ReplyDelete
  4. முத்து அண்ணாவை பற்றி இதை விட யாரும் சொல்ல முடியாது ஜான்சி அக்கா.

    ReplyDelete
    Replies
    1. ம் ம்..முத்துவின் நட்பு வாசம் தான் இதற்குக் காரணம் நன்றி Akhil Amma

      Delete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!