இயற்கை மகள்

Photo: மௌனத்தின் நெருடலில்
மயங்கிக் கிடக்கின்ற மலர்களெல்லாம்......
ஆரணங்கின் சுக விசாரிப்பில்
அடங்கித்தான் கிடக்கின்றது பரவசமாய்!

பெண்ணவள் அன்பின் முன்னால்
இயற்கையே இதயம் தொலைக்கையில்......
ஆடவர் கோத்திரம் எம்மாத்திரம்
அடடா....அதுவன்றோ காதல் சமாச்சாரம்!

உன் நட்சத்திர விழிகள்
மொழி பேசின காதலை!

நிலவுன் முகங் கண்டு
மெல்ல விழி திறந்தது!

வானவில் புருவங்கள்
என் சப்தமறிந்து சிலிர்த்தது!

கார்மேகக் கூந்தல்
காற்றில் கலைந்து வரவேற்றது ஆர்வமாய்!

உன் பிறையுதட்டில் - என்
பெயர்கள் ஒட்டிக் கொண்டன அழகாய்!

உன் மேக மேனி சிலிர்த்து
என் வெம்மை தேடி!

இருந்தும்..............
அருகில் வந்ததும் சிலிர்க்கின்றாய்
வெட்கத்தை உறிஞ்சியபடி!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை