வேண்டாமினி


Photo: சூரியனை யின்னும் கீழ்வான்
விரட்டவேயில்லை .............
இருந்தும் விடியல் மறுக்கப்பட்ட
கைதிகள் இவர்கள்!

கனவுகளால் நெய்யப்பட்ட
வாழ்க்கைக் கூடாரங்கள்.......
தரிக்கப்பட்டன அரக்கர்களால்
திட்டமிடப்பட்டு!

இவர்களின் பூமியிலேனோ
விதைக்கப்படாத மனிதாபிமானம்........ 
விட்டுச் செல்கின்றது இறப்புக்களை!

உறக்கத்திற்காக தாழிடப்படும் 
விழிகளினி..........
திறக்கவே போவதில்லை
கண்ணிமைகளை வருடியபடி!

இங்கே
ஆயுத விளைச்சல்களின் அறுவடைகள்...
தாராளமாய்
ஊற்றிக் கொண்டிருக்கின்றன
இறப்புக்களை!

மூடிவிடுங்கள் யுத்தக் குழிகளை
பிணங்களால்
ரணமாகாமலிருக்கட்டும் நம் பூமி!

சூரியனை இன்னும் கீழ்வான்
விரட்டவேயில்லை...........
இருந்தும்
விடியல் மறுக்கப்பட்ட- மரணக்
கைதிகள் இவர்கள்!

கனவுகள் தரிசிக்கும்
வாழ்க்கைக் கூடாரங்கள்.....
செல்கள் அரிக்கப்பட்டு
சொல்லாமலே காணாமற் போயின!

இவர்கள் பூமியில் விதைக்கப்படாத
மனிதாபிமானங்கள்........
விட்டுச் செல்கின்றன
அரக்கர்கள் எழுதிச் செல்லும்
இறப்புக்களை!

உறக்கத்திற்காகத் தாழிடப்படும்
விழிகளினி........
திறக்கவே போவதில்லை
கண்ணிமைகளை வருடியபடி!

ஆயுத விளைச்சல்களின் ஏறுமுகங்கள்..........
ஊற்றிச் செல்லும்
இரத்த ஊற்றுக்களில்
இரக்கங்கள் அழிக்கப்பட்டுச் செல்கின்றன
தாராளமாய்!

வேண்டாமினி..........
மூடிவிடுங்கள் யுத்தக் குழிகளை!
பிணங்களால்
ரணமாகாமலிருக்கட்டும் நம் பூமி!


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை