யதார்த்தம்


யுத்தம்.............
வறுமை
அவலம்..........
விரக்தி

யதார்த்தத்தின் தீவிரல்கள்
சிறை பிடிக்கின்றன - மன
சந்தோஷங்களை!

பிணங்களின் அரவணைப்பில்
நந்தவனமா!

சுயநலவாழ்வில்
சுகமில்லை!

நேற்றிருந்தோர்
இன்றில்லை..........
இன்றிருப்போர்!

ஓ................!

மரண அவஸ்தையின்
வலிப்பில் நாடி அறுகின்றது!

சோகங்களின் வீழ்ச்சிக்குள்ளும்
எட்டிப் பார்க்கின்றது
உன் அன்பு!

ஏந்திக் கொள்கின்றேனுன்னை..........
நாளை............
என்னை நினைவு கூர - உன்
ஆத்மா தேவையென்பதால்!
No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை