நான் ஏ.எல். படிக்கிற நேரம் (12ம் வகுப்பு)
--------------------------------------
இடம்- யாழ்ப்பாண இந்து மகளிர் கல்லூரி
வகுப்பு - கல்வி பொது தராதர உயர் தரம் விஞ்ஞானம்
வகுப்பு - கல்வி பொது தராதர உயர் தரம் விஞ்ஞானம்
ஒரு நாள் Zoology Teacher வகுப்புக்கு வந்தார். அவர் எப்பவும் மூக்குக் கண்ணாடி போட்டிருப்பார். கண்டிப்பான ரீச்சர்.
ஆனால் நோட்ஸ் நிறையத் தருவதால் ரியூசன் கிளாஸ் போகின்ற சில பேருக்கு அம் மிஸ்ஸின் பாடத்தை மிஸ் பண்ணத்தான் ஆசை. பயத்தில அரை குறையாக எழுவதைப்போல பாவனை செய்வார்கள். ஆனால் ரியூசன் வாசலை மிதிக்காத என்னப் போல சில பேரின் வற்புறுத்தலில் மிஸ் நிறைய நோட்ஸ் தருவார் .
இப்படியான மனநிலையில், ஒரு நாள் ஒரு குறித்த சப்ஜெக்ட்ல மிஸ் மந்திலி எக்ஸாம் (மாத அலகுப் பரீட்சை) தந்தார். நாங்களும் விடை எழுதிக் கொடுத்தோம். மறுநாள் எங்க விடைப் பேப்பரைத் திருத்திய மிஸ்ஸூக்கு மூக்குமேல கோபம் வந்திட்டுது.
உடனே வகுப்புக்கு வந்தார். சிலபேரின் பெயரை வாசித்து எக்ஸாம் கொப்பியை அவர்கள் மூஞ்ஜில வீசிட்டார்.
"ஸ்கூல்ல தார எக்ஸாமுக்கு நான் தார நோட்ஸ படிச்சிட்டுத்தான் விடை எழுதணுமே தவிர, ரியூசன் நோட்ஸ இங்க கொண்டு வந்து விடையா எழுதக்கூடாதுண்ணு எத்தனை தடவை சொன்னேன். "
மிஸ் சத்தம் போட்டாங்க. நாங்க கப்சிப்.
அப்படி எழுதின அத்தனை பேருக்கும் முட்டை மாக்ஸ்தான் (பூச்சியம்) கிடைத்தது. அசடு வழிய உட்கார்ந்திருந்த நண்பிகளை அனுதாபத்துடன் பார்க்கத்தான் முடிந்தது.
இப்ப அந்த ரீச்சர் இருக்கிறாவோ தெரியல. ஆனால். மனசுககுள்ள அந்த முகம் இன்னும் இறுக்கமா படிந்திருக்குது.
- Jancy Caffoor-
24.02.2015
- Jancy Caffoor-
24.02.2015
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!