குழந்தை தவழும் மனை யிலென்றும்/
குன்றாதே செல்வமும் குவிந்தே சிறக்கும்/
குதூகலச் சிரிப்பினில் குறைந்திடும் வலியும்/
குடும்ப வம்சமும் உயிர்த்திடுமே மழலையால்/
குழந்தை தவழும் மனை யிலென்றும்/
குன்றாதே செல்வமும் குவிந்தே சிறக்கும்/
குதூகலச் சிரிப்பினில் குறைந்திடும் வலியும்/
குடும்ப வம்சமும் உயிர்த்திடுமே மழலையால்/
1. ஒருநாள் இரவில்
---------------------------
சலனமற்ற இரவும் அவிழ்க்கின்ற மௌனத்தில்/
சங்கமிக்கின்றன நம் உணர்வுகள் இதமாக/
மெலிதாகத் தீண்டுகின்ற உன் விரல்களால்/
மெருகேறுகின்றதே என் வெட்கப் புன்னகையும்/
விரிகின்ற நீள்வானில் ஒளியினைப் பிசைகின்ற/
விண்ணிலாவும் கவியெழுதுகின்றதோ நம் காதலிற்கே/
---------------------------------------------------------------------------**********************************
உயரப் பறந்த உன்றன் சிறகினைத்/
தொட்டிடத் துடிக்கின்றேன் நடுவில் சாகரமோ/
எட்டிப் பார்க்கின்றாய் கனவின் விழிகளில்/
கட்டியணைத்தே கன்னம் சிவந்திடத் துடிக்கின்றேன்/
உனைத் தழுவிய விரல்களின் தவிப்பு/
உருமாறுகிறதே வரிகளாய் உன் வசமாக/
தனிமைக்குள் முகம் புதைக்கும் எண்ணங்களைத்/
திணிக்கின்றேன் மடலில் நீயும் ஏந்திடவே/
ஏக்கத்தைப் பிழிந்தே தீட்டினேன் வார்த்தைகள்/
ஏற்றிடு என்னுள்ளத்தை உன்றன் கரங்களில்/
------------------------------------------------------------------------------
3. நாணமோ இன்னும் நாணமோ
***********************************
சுருங்கிய தேகங்கள் சுமக்கின்ற அன்பு/
சுகத்தின் இரம்மியத்தில் சுவைக்கின்றதோ மகிழ்வினை/
நரை கண்டும் குறைந்திடாக் காதல்/
திரைதனை விரிக்காது ரசிக்கின்றதோ வெட்கத்தை/
முதுமைக்குள் சிரிக்கின்ற வாலிபக் காதலிது
-------------------------------------------------------------------
விழுதுகளாய் உறவுகள் தாங்கிடும் குடும்பமும்/
பூத்திடும் கதம்பமாக பூரித்திடும் வாழ்வும்/
விரிகின்ற பொழுதெல்லாம் விதைக்கின்ற அன்பினால்/
கரைந்தோடும் சலிப்பும் கனிந்திடும் உணர்வுகளும்/
பெற்றிடும் இன்பம் பற்றிடும் மனதை/
பெருங்கிளையாகத் தாங்கிடும் பெரும் அனுபவங்களும்/
பெரும் பாக்கியமே பெரியோர் அரவணைப்பும்/
பொருந்தி வாழ்தலில் சுற்றங்களும் வாழ்த்தும்/
இடர்கள் தோன்றுகையில இதமாக வருடிடும்/
பாச வெளிதனில் படர்தல் சுகமே/
ஜன்ஸி கபூர் - 05.11.2020
1.
விவாகரத்தின் விபரீதம்
இல்லறப் பயணத்தில் இணைந்திடும் முரண்களுடன்/
இசைகின்ற மனங்களும் இளைப்பாறுகின்றன விவாகரத்தில்/
இனித்திடாப் பிரிவு இன்னலே பிள்ளைகளுக்கு/
இவ்வுலக வாழ்வும் இரணத்தின் அடைக்கலமே/
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை/
குறைகளின் உருத்துலக்கம் குறைத்திடும் நிம்மதியை/
ஆளுக்கொரு பக்கமாக அசைத்திடும் கயிறோ/
அற்புத மணவாழ்வின் அழகிய மாங்கல்யம்/
புன்னகை பூத்தே புத்துயிர் தந்தாயே
புன்னகை பூத்தே புத்துயிர் தந்தாயே/
புதுவாழ்வின் நாதமாக புகுந்தாயே உணர்வில்/
புயலாய் வறுமையும் தீண்டுகின்ற வாழ்வினில்/
பூத்தாய் மலராய் புதுவசந்தம் மனதினிலே/
இல்லறச் சோலையில் இனிதாகப் பூத்தவளே/
இதயத் துடிப்பினிலே இதமாகக் கலந்தவளே/
பேசுகின்ற வார்த்தைகளில் பூசுகின்றதே அழகும்/
பூகம்பம் சூழ்கையிலே அணைக்கின்றாய் அன்பினால்/
இறைவன் தந்த இனிய வரமே/
இனிக்கின்றதே பொழுதுகளும் இன்முகம் கண்டாலே/