About Me

2020/11/01

நிலாமுற்றம்


குழந்தை தவழும் மனை யிலென்றும்/

குன்றாதே செல்வமும் குவிந்தே சிறக்கும்/

குதூகலச் சிரிப்பினில் குறைந்திடும் வலியும்/

குடும்ப வம்சமும் உயிர்த்திடுமே மழலையால்/


--------------------------------------------------------------------
3.பயணம்
*********** 
இலக்கினை வகுத்தே/
பயணத்தில் தொடர்ந்திடு/
தடைகள் விலக/
பாதைகள் தெளிவாகும்./

ஜன்ஸி கபூர் - 7.11.2020
-------------------------------------------------------------------


4. நிதியின் காலடியில்
********************** 
நிதி ஆள்கின்றதே  
......நிலையற்ற வாழ்வை/
நினைத்திடும் காரியம்
......நிறைவேற்றும் சக்தியிது/

நிதர்சனப் பொழுதுகளில் 
......நிம்மதியைப் பறிக்கின்ற/
விதியின் காலடியில் 
.......விளையாடுகின்றோம் பொம்மைகளாகி/

ஜன்ஸி கபூர் - 8.11.2020

--------------------------------------------------------------------------------------------------
5. உன்னத சேவை
-----------------------------
ஆசிரியர் ஆற்றிடும் சேவையின் மகத்துவம்/
செதுக்குமே நற்பிரஜைகளை நானிலச் சுழற்சியில்/
அறிவினைப் புகட்டி ஆற்றலை வார்த்து/
ஏணியாக உயர்த்தும் உன்னதமான ஆசான்

ஜன்ஸி கபூர் - 11.11.2020


---------------------------------------------------------------------------------------------


6. தித்திக்கும் தீபாவளி
********************** 
தீபங்களின் ஒளியில் இல்லங்கள் மகிழ்ந்திட/
திக்கெங்கும் மத்தாப்புக்கள் சிதறிச் சிரித்திட/
உள்ளங்களின் மகிழ்வில் ஊரெல்லாம் ஒளிர/
உறவாகி அணைக்குதே உவகைத் திருநாள்/

ஜன்ஸி கபூர்  - 12.11.2020
------------------------------------------------------------------------------------------ 


7. இலக்குப் பயணம்
-------------------------------
தடையை விலக்கி உடையாத இலக்கில்/
நடை போடும் நளினம் கண்டே/
விரிகின்றதே விழிகளும் சிற்றுயிரியின் ஒழுக்கத்தினில்/
நீண்ட தூரம் நிதான வேகம்/

குலையாத உறுதியில் குதூகலப் பயணம்/
சுயநலம் இல்லாமலே கூடிடும் வாழ்வால்/
சுகமும் பெறுமே சமூகக் கூட்டம்./
ஒன்றாய் இணைந்து ஒழுங்கைப் பேணி/

ஒற்றுமையாகச் சென்றே சேமிக்கும் நுட்பம்/
நமக்கும் தேவையே உழைத்திடலாம் சோர்வின்றியே/
சுறுசுறுப்பும் முயற்சியும் வெற்றியின் பக்கங்களே/
கற்றுணர்ந்தால் நாமும் பெற்றிடலாம் பெருமைதனை/

 ஜன்ஸி கபூர் - 19.11.2020
---------------------------------------------------------------------------------------------

8. வறுமை
---------------
வறுமை கொண்ட 
வாழ்வு ஏங்குது/
பொறுமை இழந்து 
மனமும் போராடுது/

ஜன்ஸி கபூர் - 21.11.2020
--------------------------------------------------------------------- 
உயிர்க்கும் விதைகள்
*********************** 
வீரம் விளைந்த மண்ணில் புதையும்/
விதைகள் யாவும் சரிதம் பேசும்/
வன்முறை தொடாத இலட்சியச் சமரில்/
தன்மானம் காத்திட உரமாக உயிர்க்கும்/

ஜன்ஸி கபூர் - 26.11.2020


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!