About Me

2020/11/14

சீவக சிந்தாமணி

 

விருத்தப்பாக் காப்பியமாம் சீவகசிந்தாமணி நமக்கே/

உயிர்த்ததுவே திருத்தக்கதேவ முனிவரின் கருவாகி/

ஏமாங்கதம் நாட்டின் பெருமன்னன் சச்சந்தன்/

ஆருயிர் மனைவியை ஆசைக்குள் பொருத்தியதால்/

அமைச்சனின் சூழ்ச்சிக்குள் இழந்தார் மணிமுடியை/

தானும் இறப்பதற்குள் தன்குலம் காத்திடவே/

வான்வழி மயிற்பொறியில் நிறைசூலி விசயையை/

வழியனுப்பி வைத்தே இன்னுயிரும் நீத்தார்/


இடுகாட்டில் பிறந்த மன்னன் வாரிசை/

இன்முகத்துடன் தனதாக்கினான் கந்தக்கடனெனும் வணிகனே/

அரும்பிய மொட்டும் விரிந்தது சீவகனாக/

தோற்றப்பொலிவுடன் ஆற்றலும் அழகுமாக மிளிர்ந்தவனை/

ஏற்றனரே காரிகைகள் எண்மர் தம்வாழ்வாக/

எட்டுத்திக்கும் போற்றவே வாழ்ந்தான் இல்லறத்தில்/


பல்தார மணமும் பணமும் புடைசூழ

நல்லுலகை அரசாண்டான் நீதிநெறியினில் சிறந்தே

தந்தையைச் சிதைத்தவனைத் தானு மழித்தே 

தாயையும் கண்டறிந்தே இணைத்திட்டான் வாழ்வினிலே


முப்பது ஆண்டென விரிந்த ஆட்சியை/

முடிவுறுத்தினான் மக்கள் ஆட்சிக் கரங்களினுள்/

நிலையற்ற வாழ்வினில் நிலைத்திடாதே செல்வமும்/

அலைகின்ற  மனதை அமைதிக்குள் அடக்கவே/

தானும் ஏற்றான் துறவற வாழ்வினை/

சீவகனின் அகவாழ்வை இயம்பிடும் சீவகசிந்தாமணி/

முன்னோடிக் காப்பியமே கவிப்புலமை நெஞ்சங்களுக்கே/


ஜன்ஸி கபூர்- 14.11.2020


2020/11/11

விறகொடிக்கப் போனவளே


வெயிலைப் போத்தி வெறுங் காலுடன் போனவளே/

வேகுதடி என்றன் மனசும் ஒன்ன நெனைச்சுத்தானே/

இருட்டுது மேகம் காற்றும் சுழற்றுதடி கண்ணம்மா/

காட்டுவழி மரங்களில கொத்தாத் தொங்குதடி குளவிகள்தான்/

துடிக்கிற உசுரோடு பூத்திருக்கேன்டி நானும் பாதையோரம்/


ஜன்ஸி கபூர் - 11.11.2020



  

2020/11/05

வாராய் - வாராய்

 

1. வாராய் - வாராய்

---------------------------------

வாராய் மழையே  மேகம் பிழிந்தூற்றட்டும்/

வானவில் பின்னிடும்  வண்ணக் கலவையும்/

மண்வாசச் சுவையினில் கலந்திடும் தென்றலும்/

என் ரசிப்புக்குள் வீழ்ந்திடவே வாராய்/


ஜன்ஸி கபூர் - 5.11.2020

-------------------------------------------------------------------------------------- 

2. கனவின் வழியே பயணம்
--------------------------------------------
அன்பும் அறிவும் ஆற்றலும்/
சிந்தையைச் செதுக்கிடும் போதெல்லாம்/
நிசத்தின் தேடலாகத் தொடர்கின்றதே/
கனவின் வழியே பயணம்/

ஜன்ஸி கபூர் - 17.11.2020

---------------------------------------------------------------------------------------- 


3. 
மூக்கும் நுகருதே வண்டின் மணம்/
நோக்கும் பார்வைக்குள் வெறுப்பும் தெரியுதே/
விரும்பா நட்பை முகமது காட்டும்/

*****
தேடி வரும் நட்பின் அணைப்பால்/
ஓடு விடுமே முரண்களும் பேதங்களும்/

ஜன்ஸி கபூர் - 18.11.2020

---------------------------------------------------------------------------------- 

4. பச்சோந்திகள்
-----------------------
 பொய்களைப் பேசியே பொருந்திடுவார் வாழ்வுக்குள்/
மெய்க்குள் வேடமிட்டு மெச்சுவார் தம்மையே/
---------------------------------------------------
சுயநலம் கொண்டு சுடுகின்றாய் அனலாக/
பயமற்றே தரிக்கின்றாய் பல வேடங்களைத்தானே/

ஜன்ஸி கபூர்
------------------------------------------------------------------------------------------

5.செம்புலப் பெயல்நீர் போல
-------------------------------------------- 
தழுவினாய் அழகான அன்பினால்/
விழுந்தேனடி நிதமும் பார்வையினில்/  
இருப்பிடம் வேறானாலும் காதல்/
இணைக்குமே நம்மை உறவுக்குள்/

ஜன்ஸி கபூர் - 24.11.2020
----------------------------------------------------------------------------------

6. ****************************
ஆதியும் அந்தமும்
இதயம்
*****************************
இதயம் தேடுகின்றதே தினமும் உன்னை/
இருவிழிகளிலும் பூக்கின்றதே உன்றன் கனவுகள்/
இணைந்திடத் துடிக்கின்றதே அன்பின் மனமும்/
இன்பச் சிறகடிப்பில் என் இதயம்/

ஜன்ஸி கபூர் -26.11.2020
--------------------------------------------------------------------------------------

7.
கீழிறங்கும் மேகம்/
வளைந்து அசைந்து செல்கின்றது/
துணி நாடா/
 
ஜன்ஸி கபூர்- 26.11.2020
-------------------------------------------------- 




 1. தொலைபேசிக்குள் தொலைந்து போனதே நமது வாழ்க்கை/

2. பொழுதுகளை விழுங்கும் இளைஞர்களின் இணைய மோகம்/
  
ஜன்ஸி கபூர் - 30.11.2020
----------------------------------------------------------------------------------------------


 

பாய்ந்தது வெள்ளம்
பாரிய சேதம் /
காய்ந்தது உதரம்
காட்டுது பஞ்சம் /
நிறைந்த வெள்ளத்தால்
நிம்மதி கரைந்தது /
மறைந்த இன்பத்தால்
மனமும் பதைத்தது /

ஒஸ்லி கபூர்
 

வறட்டு கௌரவம்



சோபனங்களைச் சுமந்து பயணிக்கின்ற வாழ்வு/

சோர்ந்து வீழ்கின்றதே வறட்டுக் கௌரவத்தில்/

நிசங்களின் துளைகளை நிரப்புகின்றன மாயைகள்/

நிம்மதி கலைக்கையில் நிதானமிழக்கின்றது மனது/


தனக்கான வாழ்வினை  பிறர் தரிப்பிடங்களாக்கி/

தகுதியில்லாக் கௌரவத்தினுள் தனையும் அடக்கி/

தவிப்புக்களைச் சுமந்து தத்தளிப்போரின் உயிர்ப்பு/

தள்ளாடுதே தினமும் அவலச் சுமைக்குள்/


அடுத்தவர்க்கே அஞ்சி தன்னையே ஒளிப்போர்/

அவனிக்குள் அலைகின்ற சுயமற்ற மாந்தரே/ 


ஜன்ஸி கபூர் - 05.11.2020