நோபல் பரிசு
சுவீடனிலுள்ள ஸ்டாக்ஹோம் நகரில் 1833 அக்டோபர் 21 ல் பிறந்த ஆல்பிரட் நோபல் என்பவரே நோபல் பரிசின் தந்தையாவார். இவர் சிறந்த கண்டுபிடிப்பாளராகவும் வேதியாளராகவும் பொறியியலாளராகவும் விளங்கினார். நோபல் தன் வாழ்வில் பெருமளவான செல்வத்தைச் சேர்த்தார். அவர் வருமானத்தில் பெரும்பகுதி 355 கண்டுபிடிப்புக்களால் பெறப்பட்டது. டைனமோட் அவர் கண்டுபிடிப்புக்களில் முக்கியமானது.

நோபல் தான் இறந்த பிறகும் மக்களால் நினைவுகூறப்பட வேண்டுமென விரும்பினார். அதனடிப்படையில் தனது சொத்தின் பெரும்பகுதி மனித இனத்திற்கு முன்னேற்றமளித்தவர்களுக்கு இயற்பியல், வேதியியல், அமைதி, மருத்துவம் ,இலக்கியம் ஆகிய துறைகளுக்கூடாக வழங்கப்படவேண்டுமென 1895 நவம்பர் 27ல் உயில் எழுதியவராய் 1895 திசம்பர் 10 ல் காலமானார். அப்பொழுது அவருக்கு வயது 63......

நோபல் பரிசு வழங்கலுக்கான நிதி மூலங்கள், அதன் நிர்வாகம் என்பவற்றை மேற்பார்வை செய்ய 1900 ஜூன் 29 ல் நோபல் அறக்கட்டளை அமைக்கப்பட்டது. அதனூடாக அவரது பரிசு வழங்கும் கனவு நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது. 1901 ம் ஆண்டு மன்னர் ஆஸ்கர்11 இனால் நோபல் பரிசு வழங்கல் நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அமைதிக்கான நோபல் பரிசினை நோர்வேயும் ஏனைய பரிசு வழங்கலை சுவீடனும் வழங்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு அதனை தற்போதும் நடைமுறைப்படுத்துகின்றன.

முதல் வேதியல் வெப்ப இயக்கவியலுக்கான பரிசு யாகோபசு வான் காவுக்கும், முதல் இயக்கவியல் பரிசு சல்லி புருதோமைக்கும் , முதல் இலக்கியத்திற்கான பரிசு விக்டோரிய கவிக்கும் முதல் மருத்துவத்திற்கான பரிசு எரிக் வான் பெரிங் குக்கும் (இவரே டிப்தீரியாவுக்கான பிறபொருளெதிரியைக் கண்டறிந்தார்) வழங்கப்பட்டது.

எனினும் இரண்டாம் உலகப்போர் காரணமாக இவ் பரிசு வழங்கலில் சற்று தளர்வு காணப்பட்டது. அதிக தடவைகள் அமைதிக்கான பரிசு வழங்கல் தவிர்க்கப்பட்டது.

1969 ம் ஆண்டு சுவீடன் நடுவண் வங்கியானது தனது 300வது வருட கொண்டாட்டத்தின் நினைவாக பெருந்தொகைப் பணத்தை நோபல் அறக்கட்டளைக்கு வழங்கி பொருளாதார அறிவியல் பரிசு வழங்கும் நடைமுறையை ஏற்படுத்தியது. இப் பரிசினை வென்ற முதலாவது நபர்கள் யான் டின்பெர்கன் மற்றும் ராக்னர் பிரிச் ஆவார்கள். இதனை சுவீடனே வழங்குகிறது. எனினும் இனி புதிய பரிசுகளை வழங்குவதில்லையென அறக்கட்டளை தீர்மானித்துள்ளது.

300பேர் பரிந்துரைக்கப்பட்டு அவர்களிலிருந்து பரிசுக்குரியவர் தெரிவு செய்யப்படுகின்றார். வருடந்தோறும் நோபல் நினைவு தினமாகிய டிசம்பர் 10 ந் திகதி அமைதிக்கான நோபல் பரிசு தவிர ஏனையவற்றுக்கான பரிசுகள் சுவீடனிலுள்ள ஸ்டோக்ஹோம் நகர்த்தில் வழங்கப்படுகின்றது. அதே தினம் அமைதிக்கான பரிசு நோர்வோயிலுள்ள ஒஸ்லோவில் வழங்கப்படுகின்றது. இப் பரிசுவழங்கும் விழாவில் பரிசு பெறுவோரின் சொற்பொழிவும் இடம்பெறும். நோபல் பரிசுத் தொகை 1 மில்லியன் டாலராகும்.

அதிக நோபல் பரிசுகளை வென்றெடுத்த நாடாக அமெரிக்கா விளங்குகின்றது.
இந்தியா நான்கு நோபல் பரிசாளர்களை உருவாக்கியுள்ளது. அவர்களுள் 1903ல் இலக்கியத்திற்காக ரவீந்திரநாத் தாகூர் அவர்களும் இயற்பியலுக்காக 1930 ல் சர் சி.வி. ராமன் அவர்களும் 1979ல் அன்னை தெரேசா அவர்கள் சமாதானத்திற்காகவும் 1998ல் பொருளாதாரத்திற்காக அமர்தியா சென் அவர்களும் பெற்றுள்ளார்கள்

உயர்ந்த சேவைக்காக வழங்கப்படும் இவ் உயரிய பரிசு சமூக சேவைக்கான சிறந்த அர்ப்பணமாகும். இப் பரிசு வழங்கலினூடாக ஆல்பிரட் நோபல் அவர்கள் இப்புவி நிலைத்திருக்கும் வரை ஞாபகங்களால் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை