வவுனியா கல்வியற்கல்லூரியில் என் பாதங்கள் பதிந்து பலவருடங்களும் கழிந்துவிட்டன.
பல ஆசிரியர்களை சமுகத்திற்குள் சேவைக்காக பயிற்றுவிக்கும் அக் கூடத்தின் நிழற்பரப்பில்தான் எனது கல்விமாணிப் பட்டப்படிப்பின் கூடமும் அமைந்திருந்தது
வவுனியா பூந்தோட்டத்திற்கே ஓர் முகவாயிலாக இக் கல்வியியற் கல்லூரி திகழ்கின்றது. இங்கு நான் என் கற்கையறிவுடன் இணைந்த நிலையில் பல நல்ல, என் தொழில் வாழ்விற்குரிய அனுபவங்களையும் உள்வாங்கியுள்ளேன்..
கல்லூரிக்குள் நுழைந்ததும் ஆசிரியர் மாணவர்களின் பல சிந்தனைத்துளிகள் காட்சிக்குள் வைக்கப்பட்டிருக்கும். அவற்றை ஒவ்வொருமுறையும் விழிகளால் நுகர்ந்து, சிந்தைக்குள் நிரப்பியே உட்செல்வேன்!
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!